AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரித்விராஜ் சுகுமாரின் ஐ, நோபடி படத்திலிருந்து வெளியானது ராவு தாண்டி பாடலின் லிரிக்கள் வீடியோ

Raavu Thaandi Lyric Video From I, Nobody Movie | நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி உள்ள ஐ, நோபடி படத்தில் இருந்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் இருந்து லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது.

பிரித்விராஜ் சுகுமாரின் ஐ, நோபடி படத்திலிருந்து வெளியானது ராவு தாண்டி பாடலின் லிரிக்கள் வீடியோ
ராவு தாண்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jul 2026 20:23 PM IST

பான் இந்திய மொழிகளில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நாயகனாக நடித்து உள்ளார். இவர் பூர்வீகம் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து பான் இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் பிரித்விராஜ் சுகுமார். நாயகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து சினிமாவில் அனைத்து துறைகளிலும் பிரபலமானவராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பள்ளிச்சட்டம்பி படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடித்து இருந்தார். இது இந்த ஆண்டின் தொடக்கமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ, நோபடி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

வெளியானது ராவு தாண்டி பாடலின் லிரிக்கள் வீடியோ:

அதன்படி இயக்குநர் நிஷாம் பஷீர் எழுதி இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகின்ற 09-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில்  இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் ராவு தாண்டி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Kriti Sanon: நடிகைகளை கண்ணியமாக பாருங்க… இது கேவலமாக இல்லையா? – கிரிதி சனோன்!

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜப்பானில் வெளியாகும் துரந்தர் 2.. ரன்வீர் சிங் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!

Follow Us