Jailer 2: டைகர் முத்துவேல் பாண்டியன் வரார்.. ஜெயிலர் 2 பட ரிலீஸ் எப்போது தெரியுமா?
Jailer 2 Release Date: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 172வது திரைப்படமாக தயாராகிவந்ததுதான் ஜெயிலர் 2. நெல்சன் திலீப்குமார் இயக்க, இதற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்னும் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வீடியோ பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த இந்திய முழுவதும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 172வது படமாக உருவாக்கப்பட்டுவருவதுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜெயிலர் 1 படத்தில் நடித்திருந்த பல நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சில புது மற்றும் பிரம்மாண்ட நடிகர்களும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் தனது ஷூட்டிங்கை முடித்ததாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் கேமியோ வேடம் ஷூட்டிங் தற்போது நடக்கிறதாம். 2026ம் ஆண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கும் நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ பதிவை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: அஜித்துடன் படத்தில் இணைவீர்களா? நச் பதிலை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
முத்துவேல் பாண்டியனின் வருகை எப்போது:
ஜெயிலர் 2 படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், படத்தின் மீட்டது ரசிகர்களுக்கு அதிகம் எதிர்பார்ப்புகள் உள்ளது. அதன்படி இதை கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திலே வெளியிட திட்டமிட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் முடியாமலே இருந்தது. அந்த வரிசையில், தற்போது இதை 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
இப்படம் வெளியாகும் மறுநாள், அக்டோபர் 16ம் தேதியில் தனுஷின் ஓம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த இரு படங்களுக்கும் இடையே போட்டி நிலவுமா? அல்லது தனுஷ் ரிலீஸ் தேதியை மாற்றியமைப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெயிலர் 2 ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு எக்ஸ் பதிவு:
Alappara Kelappurom! #Jailer2 storms into theatres worldwide on October 15 🔥 #Jailer2FromOct15 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren @kabilanchelliah @RIAZtheboss pic.twitter.com/mY50qNOSQh
— Sun Pictures (@sunpictures) July 2, 2026
இப்படத்தை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ வேடத்தில் நடிக்கிறாராம். இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த இந்தி படத்தில் அவருக்கு மகனாக நடித்திருக்கிறார். அந்த விதத்தில், மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேலும் இதில் விஜய் சேதுபதி, சந்தானம் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு போன்ற பிரபலங்களும் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.