AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Suriya 47 movie title teaser update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அவரது 47-வது படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
சூர்யா 47Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2026 15:44 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் படங்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டில் மட்டும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதன்படி முன்னதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது?

சூர்யாவின் 47-வது படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்காலிகமாக சூர்யா 47 என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சூரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த மாதத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள் – வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தற்போதைய தமிழ் சினிமாவில் மிகவும் புத்திசாலியான நபர் பிரதீப் ரங்கநாதன் – ஆர்.ஜே.பாலாஜி

Follow Us