AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்

Actor Suriyas 47th Movie Shooting Update Here | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் 47-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்
சூர்யா 47Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2026 18:57 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். நடிகர் சூர்யாவின் 46-வது படமான இதை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் ரொமாண்டிக் ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் பொருந்தா காதல் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வயது மிகுந்த ஒரு நபரை காதலிக்கும் இளம் வயது பெண் என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சூர்யா 47. இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் எழுதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன?

சூர்யாவின் 47-வது படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

Also Read… ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இணையத்தில் வைரலாகும் சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ:

Also Read… எனக்கு ஸ்வாசிகா – மோகன்லால் சார் மேல பயங்கரா கோவம்… விஜய் ஆண்டனி கலகல பேச்சு

Follow Us