Vijay Antony: நூறு சாமி பட கதையை சசி சார் சொல்லும்போதே அழுதுட்டேன் – விஜய் ஆண்டனி பேச்சு!
Vijay Antony About Nooru Saami: தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களை வெளியிட்டுவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இறுதியாக வெளியான படம் நூறு சாமி. இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய அவர், நூறு சாமி பட கதையை கேட்ட சமயம் அழுத்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மற்றும் நடிகராக மிகவும் பிரபலமானவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 படங்களும் இசையமைப்பில், 60க்கும் மேற்பட்ட படங்களும் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தற்போது தயாரிப்பாளாராகவும் படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டார். அவ்வாறு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இவர் உருவாக்கிய புது படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் சசி (Director Sasi) இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். மேலும் இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக இருந்தாலும், ஸ்வாசிகாவின் (Sawsika) வேடம் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் அவர் விதவை பெண்ணின் வாழ்க்கை, ஆசை போன்ற கதைக்களத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழா மதுரையில் நடைபெற்றிருந்தது. அதில் பேசிய விஜய் ஆண்டனி, இப்படத்தில் கதையை கேட்டபோதே அழுத்ததாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா அரசியல் வருகிறாரா..? அதிரடியாக நற்பணி மன்றம் கொடுத்த விளக்கம்!
நூறு சாமி திரைப்படத்தை பற்றி பேசிய விஜய் ஆண்டனி:
அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, “முதலில் நூருசாமி படத்தின் வெற்றிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அவர், “இயக்குநர் சசி சார் சொல்லாமலே படத்திலிருந்து, இன்றுவரைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் தனித்துவம் மற்றும் திருப்தி இல்லாமல் படம் பண்ணாதே இல்லை. காலம் காலமாக இந்த சமூகம் ஒரு பிற்போக்குத்தனமாக விஷயத்தை வைத்திருந்தது. மேலும் 4 அல்லது 5 வருடங்களில் துணையை என்ற விஷயத்தை இன்றுவரையிலும் வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: கமெண்டில் ஜன நாயகன் அப்டேட்டை கேட்கும் ரசிகர்கள் – இயக்குநர் சிதம்பரம் ஓபன் டாக்
அந்த கருத்தை உடைக்கும் வகையில், இந்த நூருசாமி படமானது ஒரு பங்காவது செய்யும் என நினைத்தேன். நான் இப்படத்தின் கதையை கேட்கும்போதே அழுதுட்டேன். என்னால அடக்க முடியல. பிச்சைக்காரன் 1 பட கதை கேட்கும்போதும் நான் அழுதேன் என அதில் அவர் கூறியிருந்தார்.
நூறு சாமி திரைப்படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு:
Thank you so much, Karthik. 😊❤️🙏
Your words and encouragement mean a lot to our team and to the good content we are trying to create. Thank you so much for your support.🙏 https://t.co/R6s0Yaje8y— vijayantony (@vijayantony) June 19, 2026
இந்த திரைப்படமானது வெளியாகி ஒரு வாரத்தைக் கடந்திருக்கும் நிலையில், தற்போதுவரை ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை ஏற்றுவருகிறது. மேலும் திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிப்படமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.