இவ்வளவு நெருக்கமான சொந்தமா? அனிருத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் எப்படி உறவுக்காரர் தெரியுமா?
YG Mahendran talks about Anirudh and Kavya Maran Marriage | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பான் இந்திய அளவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமணம் குறித்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமணம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அனிருத் ரவிச்சந்தரின் நெருங்கிய உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பிரபல தயாரிப்பாளரின் மகளான காவ்யா மாறன் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக பேசியுள்ளார். அந்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அனிருத்தின் திருமண செய்தி உறுதி செய்த ஒய்.ஜி.மகேந்திரன்:
அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ள கலாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இது குறித்து இரண்டு தரப்பினரும் எதிர் கருத்தோ அல்லது ஆம் என்றோ எந்த்விதமான பதிலும் சொல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் அனிருத் ரவிச்சந்தரின் உறவினராக ஒய்.ஜி.மகேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணத்தை உறுதி செய்துள்ளார். இரு வீட்டாரின் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ன்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




அனிருத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் எப்படி உறவுக்காரர் தெரியுமா?
அனிருத்திற்கு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மாமா முறை ஆகிறது. அனிருத்தின் தந்தை நடிகர் ரவிச்சந்தரின் சகோதரியின் கணவர் தான் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். அந்த வகையில் அனிருத்திற்கு ஒய்.ஜி.மகேந்திரன் மாமா முறை ஆகிறார். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சகலைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி
இணையத்தில் வைரலாகும் ஒய்.ஜி.மகேந்திரனின் பேச்சு:
#YGMahendran who is the relative of Anirudh, confirms that #Anirudh is going to marry #KavyaMaran soon✨pic.twitter.com/1XedZLXjaE
— AmuthaBharathi (@CinemaWithAB) June 28, 2026
Also Read… K Bhagyaraj: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் 3. நடிகர்கள் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாகதான் அவர் இசையமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே தனது முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் பல ரசிகர்களைப் பெற்றார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய், அஜித் குமார், ரஜினிகாந்த், கமல் ஹாசன், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலரது படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.