AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராம் இன் லீலா படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட அனிருத் ரவிச்சந்தர்

Yaar Yaarival Video Song | நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராம் இன் லீலா படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட அனிருத் ரவிச்சந்தர்
ராம் இன் லீலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 17:01 PM IST

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் ரியோ ராஜ். இவர் சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் ஆரம்பத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நிகழ்ச்சி தொகுப்பாளராக தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். பிறகு சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நடித்த சீரியல் தமிழகம மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ராம் இன் லீலா படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட அனிருத்:

இந்த ராம் இன் லீலா படத்தை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகை வர்த்திகா நாயகியாக நடித்து உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து தற்போது முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது. அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் யார் யாரிவள் என்ற இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அந்த பெண் 100 பார்வதிக்கு சமம் – பூ படம் குறித்து பேசிய இயக்குநர் சசி

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன் – வைரலாகும் ரவி மோகன் பதிவு

Follow Us