AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி இவரு என்ன பண்ணப்போறாரு – தனக்காக வருத்தப்பட்ட ரஜினி – கமல்ஹாசன் உருக்கம்

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 24, 2026 இன்று வெளியாகியது. இந்த படத்தை ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இனி இவரு என்ன பண்ணப்போறாரு – தனக்காக வருத்தப்பட்ட ரஜினி – கமல்ஹாசன் உருக்கம்
கமல்ஹாசன் - ரஜினிகாந்த்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Jun 2026 12:36 PM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 24, 2026 இன்று வெளியாகியது. இந்த படத்தை ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் குறித்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தனது சகோததர் சந்திரஹாசன் மறைந்தபோது பேசிய ரஜினிகாந்த், இனி கமல் என்ன பண்ணப்போறாரு என என்னை நினைத்து வருத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் குறித்து கமல் உருக்கம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் 2 படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியிருந்தார். அதில் ஒரு படத்தில் நடிகர் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அந்தப் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக புரமோ வீடியோவும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை இயக்கப்போதவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

இதையும் படிக்க : கருப்பு படத்திலிருந்து வெளியானது கருப்பா கூட வா வீடியோ பாடல்

அந்த வகையில் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென படத்தில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குவார் என தகவல் வெளியான நிலையில் அவரும் இந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையை ஏற்படுத்தியது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸின் பதிவு

 

இதையும் படிக்க : Arasan: அன்பு மற்றும் அரசனின் சந்திப்பு.. சிம்புவின் அரசன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

இந்த நிலையில் தான் இந்தப் படத்தை இயக்க ஓ மை கடவுளே, டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தர்மன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் ரஜினிகாந்த் குறித்து உருக்கமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நிகழ்வில் பேசிய அவர், சந்திரஹாசனின் இரங்கல் கூட்டத்திற்கு வந்தபோது இனி கமல் என்ன பண்ண போகிறார் என ரஜினிகாந்த் வருத்தப்பட்டார். அப்போது நான் மகேந்திரனை பார்த்தேன். எனக்கு அப்போது இன்னொரு சகோதரர் கிடைத்திருக்கிறார் என தோன்றியது என்றார்.

Follow Us