AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்தியின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது – விஷ்ணு விஷால் சொன்ன உண்மைச் சம்பவம்

Vishnu Vishal talks about missed movies | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிக்காமல் விட்டு சூப்பர் ஹிட் அடித்த படம் குறித்து வெளிப்படையாக பேசினார்.

கார்த்தியின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது – விஷ்ணு விஷால் சொன்ன உண்மைச் சம்பவம்
விஷ்ணு விஷால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jun 2026 18:46 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கட்டா குஸ்தி 2 படம். இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த பேட்டியில் தனது கட்டா குஸ்தி 2 படம் குறித்து மட்டும் இன்றி முன்னதாக தான் நடித்த மற்றும் நடிக்காமல் விட்ட சூப்பர் ஹிட் படங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் மகான் அல்ல படம் நான் நடிப்பதாக இருந்தது:

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியான  நான் மகான் அல்ல திரைப்படம் உண்மையில் நான் நடித்திருக்க வேண்டிய ஒரு படம் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முந்தைய நாள் வரை அப்படத்தில் நான் இணைவதாகவே இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பை நான் தவறவிட்டேன். அப்படம் எனது இரண்டாவது படமாக அமைந்திருந்தால், எனது திரைப்பயணம் முற்றிலும் வேறொரு விதமாக இருந்திருக்கும் என்று விஷ்ணு விஷால் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விரைவில் வெளியாகும் அஜித் குமார் 64 படத்தின் அப்டேட் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் விஷ்ணு விஷால் பேச்சு:

Also Read… கருப்பு படத்தின் VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி

Follow Us