AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகை மமிதா பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு

Viswanath and Sons movie team celebrates Mamitha Baiju birthday | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

நடிகை மமிதா பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு
நடிகை மமிதா பைஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 15:41 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறுபவராக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிறகு மலையாள சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்த போதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் நாயகியாக நடிக்கத் தொடங்கிய பிறகு தென்னிந்திய சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். அதன்படி தற்போது இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அதன்படி முதலாவதாக டியூட் மற்றும் இரண்டாவதாக கர ஆகியப் படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்து மூன்றாவதாக விஸ்வநாத் & சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் அடுத்தடுத்து ஜன நாயகன் மற்றும் இரண்டு வானம் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக உள்ளது.

மமிதா பைஜுவின் பிறந்த நாளை கொண்டாடும் படக்குழுவினர்:

இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ இன்று தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சமூக வலைதளத்தில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்தது ஓம் படத்தின் டைட்டில் வீடியோ

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kayadu Lohar: மனதிற்கும் ஓய்வு தேவைப்படுகிறது.. சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த கயாடு லோஹர்!

Follow Us