AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: மனதிற்கும் ஓய்வு தேவைப்படுகிறது.. சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த கயாடு லோஹர்!

Kayadu Lohar Takes Social Media Break: டிராகன் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் கயாடு லோஹர். இவர் தற்போது தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நாயகியாக நடித்து அசத்திவருகிறார். இந்நிலையில் அவர் சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகியிருக்கவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Kayadu Lohar: மனதிற்கும் ஓய்வு தேவைப்படுகிறது.. சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த கயாடு லோஹர்!
கயாடு லோஹர்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jun 2026 15:42 PM IST

அசாமை பூர்விகமாக கொண்ட நடிகைதான் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், மலையாளம் மற்றும் தமிழ் போன்ற அடுத்தடுத்த மொழிகளிலும் தனது அறிமுகத்தை ஏற்படுத்தியிருந்தார். அதில் தமிழில் ஒரே படத்தின் மூலம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. அந்த படம் பிரதீப் ரங்கநாதனுடன் (Pradeep Ranganathan) இணைந்து நடித்திருந்த டிராகன் (Dragon). கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துவந்தார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக தயாராகியுள்ள புதிய திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali).

இதில் நடிகர் அதர்வாவுக்கு (Athrvaa) ஜோடியாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவந்த நிலையில், தற்போது அதிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகுவதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடல்

கயாடு லோஹர் சோஷியல் மீடியாவிலிருந்து விலக காரணம் என்ன:

அந்த பதிவில் கயாடு லோஹர், “சில நேரங்களில், நாம் நம் உடலுக்கு அளிக்கும் அதே வகையான ஓய்வு மனதிற்கும் தேவைப்படுகிறது. நான் யோசித்து, சிறிது காலம் துண்டித்துக்கொண்டு, திரைக்கு அப்பால் என்னுடனும் வாழ்க்கையுடனும் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தேவையை உணர்கிறேன். எனக்கு ஆதரவளித்த, என்னை ஊக்குவித்த, மற்றும் இங்கே அன்பைப் பரப்பிய அனைவருக்கும் நன்றி.

இதையும் படிங்க: சூர்யா47 படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? இயக்குநர் கொடுத்த நியூ அப்டேட்!

உங்கள் செய்திகளும் அன்பும் நீங்கள் நினைப்பதை விட எனக்கு மிகவும் முக்கியமானவை. நான் சில காலம் இதிலிருந்து விளக்கவுள்ளேன். ஆனால் எனது படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை எனது குழுவினர்கள் இந்த் கணக்கில் பகிர்வார்கள். விரைவில் சந்திப்போம்” என அதில் அவர் கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்களிலிருந்து விலகுவது குறித்து கயாடு லோஹர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

கயாடு லோஹர் தமிழில், இதயம் முரளி, இம்மார்ட்டல், மஞ்சணத்தி போன்ற படங்களிலும், தெலுங்கில் தி பாரடைஸ் படத்திலும், மலையாளத்தில் ஐஆம் கேம், கலீஃபா, தாரம் போன்ற படங்களிலும் நடிக்கிறார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 6-க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us