AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடல்

Pattampoochi Lyric Video | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடல்
பட்டாம்பூச்சி பாடல்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2026 17:10 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து உருவாகி வெளியாகி வருகின்றது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். தெலுங்கு சினிமாவில் முனன்ணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான படம் லக்கி பாஸ்கர். நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த அந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து. மேலும் இந்தப் படம் ஓடிடியிலும் மாபெரும் வெற்றிப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு மெகா சூப்பர் ஹிட்டை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

தொடர்ந்து இந்தப் படத்திற்கு விஸ்வநாத & சன்ஸ் என்று பெயர் வைத்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்து உள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடல்:

இந்த நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்ற நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி உள்ள பட்டாம்பூச்சி என்ற பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jiiva: இனி ஜாலி மோட்தான் மச்சி… ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் – டீசர் எப்போது?

விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… D55 Movie: அமரன் பட இயக்கத்தில் தனுஷ்.. D55 பட டைட்டில் இதுதான் – வெளியானது கிளிம்ப்ஸ்!

Follow Us