AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா – நஸ்ரியா நடிக்கும் சூர்யா47 பட ஷூட்டிங் எப்போது முடியும்? – தகவல் இதோ!

Suriya47 Movie Shooting Update: மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கும் புது படம்தான் சூர்யா47. இப்படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஷூட்டிங் எப்போது முடியும் என தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யா – நஸ்ரியா நடிக்கும் சூர்யா47 பட ஷூட்டிங் எப்போது முடியும்? – தகவல் இதோ!
சூர்யா47 திரைப்பட படப்பிடிப்பு அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jun 2026 16:50 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்களின் அன்பை அதிகம் கொண்ட நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவர் சினிமாவில் வெறும் ஹீரோவாக இல்லாமல், நிஜத்திலும் பல நல்ல விஷயங்களை செய்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த கருப்பு (Karuppu) படமானது எதிர்பாராத சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்று சுமார் ரூ 340 கோடிகளுக்கு மேல் வசூலை தீட்டி வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில், சூர்யா நடித்துவந்த புதிய படம்தான் சூர்யா47 (Suriya47). இதில் மலையாள நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நாயகியாக நடித்து அசத்திவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்? அட இதுதான்!

சூர்யாவின் 47வது படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும்:

சூர்யாவின் 47வது படமானது தமிழ் மற்றும் மலையாளம் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இதில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் நடித்துவருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு பின் தமிழில் நாயகியாக நடிக்கும் படமாக இது அமைத்துள்ளது.

இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்… வைரலாகும் அரசன் படத்தின் அப்டேட்

இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்றுவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இறுதிக்குள் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழில் பிரபல இயக்குநருடன் சூர்யா புதிய படத்தில் இணைகிறாராம்.

சூர்யா47 பட ஷூட்டிங் நிறைவு குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்தவுடன் சூர்யா, ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா48 படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது 5 ரூபாய் டாக்டரின் கதையை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us