AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்? அட இதுதான்!

Tamil Nadu Theatrical Release Rights: இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில்,வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறப்பாக தயாராகியுள்ள படம்தான் கட்டா குஸ்தி 2. இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்பட தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்? அட இதுதான்!
கட்டா குஸ்தி 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jun 2026 14:59 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் ஆர்யன் (Aryan) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் சிறப்பாக உருவாகிவந்த புதிய திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இப்படமானது கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இதை இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இயக்கியுள்ள நிலையில், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் சத்யவான் சாவித்ரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

கட்டா குஸ்தி 2 படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற தயாரிப்பு நிறுவனம்:

இந்த கட்டா குஸ்தி 2 படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: நூறு சாமி முதல் சின்ன சின்ன ஆசை வரை… தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இதற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமானது வாங்கியுள்ளதாம். தற்போது இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கட்ட குஸ்தி 2 பட தமிழக ரிலீஸ் உரிமையை குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த கட்டா குஸ்தி 2 படமானது பேமிலி பொழுதுபோக்கு மற்றும் அதிரடி காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இன்னும் 3 வாரங்களில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us