AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டா குஸ்தி 2 படம் யாருக்கானதாக இருக்கும் – நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்

Vishnu Vishal talks about Gatta Kusthi 2 movie | தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது. அந்தப் படத்தினை குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கட்டா குஸ்தி 2 படம் யாருக்கானதாக இருக்கும் – நடிகர் விஷ்ணு விஷால் ஓபன் டாக்
ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் விஷ்ணு விஷால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2026 09:33 AM IST

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதன் மூலம் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிகராக சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக கிரிக்கெட் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நாயகனாக அறிமுகம் ஆனதும் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியான படத்தில் தான். அடிப்படையிலேயே விளையாட்டு வீரராக விஷ்ணு விஷால் இருந்த காரணத்தால் விளையாட்டு தொடர்பாக வரும் படங்களில் இவரது நடிப்பு மற்றப் படங்களைவிட ஒரு படி அதிகமாக சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருவது வழக்கம். தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்களை தயாரித்தும் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை போல தயாரிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதில் முதலாவதாக விஷ்ணு விஷால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் குறித்து விஷ்ணு விஷால் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கட்டா குஸ்தி 2 படம் யாருக்கானதாக இருக்கும்:

கட்டா குஸ்தி 2 குறித்த சில விவரங்களை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார். இப்படம் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான அம்சங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். முதல் பாகம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் எப்படி உருவாக்கப்படுகிறது என்று கேட்டபோது, ​​முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறிப்பால் உணர்த்தப்பட்டதாகவும், அதிலிருந்தே இரண்டாம் பாகம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தத் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகத்தை உருவாக்குவதற்கான யோசனை ஏற்கனவே தங்களிடம் இருப்பதால், அதற்கான வாய்ப்பும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்? அட இவர்தான்!

இணையத்தில் வைரலாகும் விஷ்ணு விஷால் பேச்சு:

Also Read… அண்ணன் முதலமைச்சர் விஜயை சந்தித்ததில் மகிழ்ச்சி – வைரலாகும் சிம்புவின் போஸ்ட்

Follow Us