Con City: கான் சிட்டி படத்தின் டப்பிங் பணியை முடித்த நடிகர்கள்.. நகைச்சுவையுடன் கூடிய வீடியோவை பகிர்ந்த படக்குழு!
Arjun Das Con City:நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கான் சிட்டி. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர்கள் முழுவதுமாக முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் மாஸ்டர் திரைப்படத்தின் (Master) மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). இவருக்கு இப்படத்தின் மூலமாக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்துவரும் நிலையில், இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்துவருகிறது. இந்த வரிசையில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் (Harish Durairaj) இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் கான் சிட்டி (Con City). இப்படமானது வித்தியாசமான குடும்ப கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர்கள் முழுவதுமாக நிறைவு செய்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நகைச்சுவையுடன் கூடிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: ஏசியன் லெ மான்ஸ் கார் ரேஸ்.. 13வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!
கான் சிட்டி பட டப்பிங் பணியை நடிகர்கள் நிறைவு செய்தது குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:
All the fun in the dubbing room 🎙️#ConCity dubbing wrapped – it’s almost time for the fun entertainer on the big screen, on June 26!
A film by @harish_durairaj.
An @RSeanRoldan musical.
Starring @iam_arjundas @benanna_love @sakshivaidya99 @iYogiBabu #Vadivukkarasi #Akhilan.… pic.twitter.com/5llmgiSRvs
— Power House Pictures (@powerhousepic) June 14, 2026
கான் சிட்டி படம் எப்படி இருக்கும்:
இந்த கான் சிட்டி படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் அருள்தாஸ், யோகி பாபு, ராதா ரவி, வடிவுக்கரசி, தம்பி ராமையா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.. இந்த படமானது ஒரு பணம் கொடுக்கும் மிஷினை மையமாக கொண்ட ஒரு காமெடி மற்றும் எமோஷனல் நிறைந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: கரண்ட் போகுதா..? சோலார் வாங்கி மாட்டிக்கோங்க! – மாஸ்டர் மகேந்திரன் பேச்சு!
இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தை பவர் ஹவுஸ் பிக்ச்சர்ஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ரிலீஸிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் சென்சார் தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.