Anirudh: அனிருத்துக்கு பிடிச்ச நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
Anirudh's Favorite Actress: பான் இந்திய பிரபல இசையமைப்பாளராக இருந்துவருபவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர். இவை முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் அவருக்கு பிடித்த நடிகை யார் என்பது குறித்து தெரிவித்தள்ளார். அந்த நடிகை யார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.
ரசிகர்களால் அன்போடு ராக்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது, இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டில் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான 3 (மூணு) என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தார். இவர் இசையமைப்பாளராக நுழைந்த முதல் படமே இவருக்கு எதிர்பாராத ஹிட்டை கொடுத்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தனுஷின் தயாரிப்பில் உருவான பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். மேலும் இவர் முதல் முதலில் இசையமைத்த பிரம்மாண்ட பட்ஜெட் படம்தான் கத்தி (Kathi).
தளபதி விஜய் (Thalapathy Vijay) மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) கூட்டணியில் உருவான இப்படத்தின் மூலம் பெரிய இடங்களுக்கும் இசையமைத்து ஹிட் கொடுக்கமுடியும் என அனிருத் நிரூபித்து காட்டியிருந்தார். இதை அவர் பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அனிருத், தனக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்று கூறியிருக்கிறார்.




இதையும் படிங்க: விக்ரம் படத்தில் எனக்கு மூணு பொண்டாடி வைப்பதற்கு காரணம் இதுதான் – கலகலப்பாக விஜய் சேதுபதி பகிர்ந்த விஷயம்!
அனிருத்துக்கு பிடித்த நடிகை இவர்தான்:
முன்னதாக சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த அனிரூத்திடம், “தொகுப்பாளர் உங்களுக்கு பிடித்த நடிகை யார்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அனிருத் ரவிச்சந்தர், “தனக்கு நடிகை இலியானா டி’க்ரூஸ் (Ileana D’Cruz) என்ற ரொம்ப பிடிக்கும்” என கூறியிருந்தார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. நடிகை இலியானா தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தளபதி விஜய் நடிக்க, இயக்குநர் சங்கர் இயக்கியிருந்த நண்பன் என்ற படத்தில் கதாநாயகியாக இலியானா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.எஸ்.தோனியின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம்
இசையமைப்பாளர் அனிருத்தின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
இசையமைப்பாளார் அனிருத் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை பல்வேறு உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் தமிழில் ஜெயிலர் 2, தலைவர் 173, மேஜிக், தி பாரடைஸ், அரசன், டிசி, கிங், AA23, KHxRK மற்றும் ஜன நாயகன் போன்ற படங்களின் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். மேலும் இவர் ஆல்பம் பாடல்களையும் உருவாக்கிவருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பல படங்களின் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தமாகிவருகிறார்.