Meenaakshi Chaudhary: அந்த நடிகருடன் நான் மூவி டேட் போவேன்.. மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!
Meenaakshi Chaudhary About Her Dream Movie Date: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் மீனாட்சி சவுத்ரி. முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், எந்த நடிகருடன் மூவி டேட் செல்வேன் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
தெலுங்கு, தமிழ் போன்ற மொழி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மீனாட்சி சவுத்ரி (Meenakshi Chaudhary). இவர் வரும் நடிகை மட்டும் அல்ல, இவர் பிரபல பேட்மிட்டன் பிளேயரும் கூட. இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பல அழகிகள் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது கொலை (Kolai). நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் இப்படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இவருக்கு தமிழில் பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்திருந்த திரைப்படம்தான் தி கோட் (The GOAT).
இப்படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) நடித்திருந்த ஜீவன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு எதிர்பாராத வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த மீனாட்சி சவுத்ரி, மூவி டேட் என்ற நடிகருடன்செல்வார் என்பது பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விஸ்வாசம் அஜித் குமாரின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் – தயாரிப்பாளர் ஓபன் டாக்
நடிகருடன் மூவி டேட் செல்வது குறித்து நடிகை மீனாட்சி சவுத்ரி சொன்ன விஷயம்:
முன்பு நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் யாருடன் மூவி டேட் செல்வீர்கள்? என நடிகை மீனாட்சி சவுத்ரியிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. உடனே பேசிய அவர், “மூவி டேட் ஆ, நீங்களே சொல்லுங்கள் யாருடன் செல்லலாம்” என சொன்னார். கொஞ்ச நேரமாக யோசித்த அவர் உடனே, “நான் மூவி டேட் செல்லவேண்டும் என்றால் சிம்பு சாருடன் செல்வேன்” என ஓபனாக பேசியிருந்தார். இது குறித்த தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவந்தது. மேலும் மீனாட்சி சவுத்ரி ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த ஒரு சம்பவம் இனிஉருவ கேலி பண்ண கூடாதுனு முடிவு செய்தேன் – ஊர்வசி ஓபன் டாக்
நடிகை மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை மீனாட்சி சவுத்ரி, தி கோட் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. முழுவதுமாக தெலுங்கு மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். இவரின் நடிப்பில் தெலுங்கில் சிறப்பாக தயாராகிவரும் படம்தான் விருஷகர்மா. இதில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துவருகிறார். இதையடுத்து கார்த்தியின் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் புது படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.