AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிராமத்து பின்னணி கதையில்.. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தனுஷ்?

Siruthai Siva And Dhanush Team Up: கோலிவுட்டில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிறுத்தை சிவா. இவர் இறுதியாக சூர்யாவின் கங்குவா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தனுஷின் நடிப்பில், புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

கிராமத்து பின்னணி கதையில்.. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தனுஷ்?
சிறுத்தை சிவா மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jun 2026 18:51 PM IST

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியகைவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த படம் கர (Kara). இதை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh raja) இயக்கியிருந்த நிலையில், மமிதா பைஜூ மற்றும் தனுஷ் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது ஒரு வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்ததாக தற்போது இவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் டி55 (D55) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இதில் சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படமானது தயாராகிவருகிறது.

இப்படத்தை அடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஓரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக அடுத்தடுத்த படங்களை தனுஷ் ரெடியாக வைத்துள்ளார். இந்த வரிசையில் இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்ற விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஜன நாயகன் விஜய் பிறந்த நாளிலும் வெளியாகாதா? வைரலாகும் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் இணையும் தனுஷ்:

நடிகர் தனுஷ் இயக்குநராகவும், நடிகராகவும் தொடர்ந்து சினிமாவில் தனது ஆர்வத்தை செலுத்திவருகிறார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இறுதியாக கங்குவா என்ற படமானது வெளியானது. இப்படம் 2024ம் ஆனதில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து அஜித்துடன் சிறுத்தை சிவா இணைவதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: அதற்காகவே பெத்தி படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன் – ஜான்வி கபூர்!

இந்த வரிசையில் தனுஷை வைத்து புதிய படத்தை இவர் இயக்குவதாக கூறப்படுகிறது. இதை குட் பேட் அக்லி, டியூட் போன்ற படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கிராமத்து கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் டி55 படத்தில் நடிக்கிறார். இப்படமானது முழுக்க ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இதில் இரு நடிகைகள் இருக்கும் நிலையில், படமும் மாஸாக தயாராகிவருகிறது. இப்படம் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது உண்மையானால் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us