ஜன நாயகன் விஜய் பிறந்த நாளிலும் வெளியாகாதா? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Release Issue | நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள ஜன நாயகன் படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு வந்த நிலையில் அதிலும் சிக்கல் உள்ளதாக தகவல்க வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் நடிகர் தளபதி விஜய். சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன தனது படங்களை தொடர்ந்து வெற்றி அடையச் செய்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக மாற்றிய தமிழக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற என்னத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடர்ங்கினார் நடிகர் விஜய். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்சி நடத்தி வந்த இவர் இந்த 2026-ம் ஆண்டில் நடைப்பெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னதாக தான் நடித்த ஜன நாயகன் தான் தனது நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்றும் இனி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.
இதுதான் தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. தொடர்ந்து இந்தப் படம் ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகமல் போனது. இந்த நிலையில் படத்தின் சென்சார் பிரச்சனை நீண்டு கொண்டே போன போது படம் முழுவதும் இணையத்தில் கசிந்து பெரும் பிரச்சனையை சந்தித்தது. பல பிரச்சனைகளை சந்தித்த இந்த ஜன நாயகன் படம் இறுதியாக தளபதி விஜயின் பிறந்த நாளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




ஜன நாயகன் விஜய் பிறந்த நாளிலும் வெளியாகாதா?
தயாரிப்புத் தரப்பும் படக்குழுவும், தளபதி விஜயின் பிறந்தநாளான ஜூன் 19-ஆம் தேதியை ஒட்டித் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தன; ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ் இன்னும் கிடைக்காததால், அத்தேதியில் படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் தற்போதும் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், உத்தேச வெளியீட்டுத் தேதியை இந்த வெள்ளிக்கிழமையன்று விநியோகஸ்தர்களிடம் அறிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read… Manjanathi: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் இரு மாஸ் கதாநாயகிகள்.. அட இவர்கள்தான்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan – The production and team was eyeing a June 19th theatrical release coinciding #ThalapathyVijay / #CMVijay birthday but without a CBFC certificate there’s low possibilities for that even now, they’ve mentioned to the Distrubutor’s that they’ll announce the tentative… pic.twitter.com/muiAfraXBi
— Movies Singapore (@MoviesSingapore) June 1, 2026
Also Read… இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தின் பூஜை போட்டோஸ்