AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Manjanathi: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் இரு மாஸ் கதாநாயகிகள்.. அட இவர்கள்தான்!

Mari Selvaraj New Film: கோலிவுட் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்தில் இறுதியாக பைசன் படம் வெளியான நிலையில், இதையடுத்து தற்போது மஞ்சணத்தி என்ற புது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இரு நடிகைகள் நடிக்கிறார்கள், அது யார் என விவரமாக பார்க்கலாம்.

Manjanathi: மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் இரு மாஸ் கதாநாயகிகள்.. அட இவர்கள்தான்!
மஞ்சணத்தி படத்தில் இணைந்த பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Jun 2026 16:17 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் இறுதியாக பைசன் (Bison) என்ற படமானது வெளியானது. இதில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இயக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அடுத்ததாக இவர் தனுஷின் டி56 (D56) படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இதை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனுஷ், லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் இணைவதாக கூறிவிட்டார். இதையடுத்து தனுஷ் (Dhanush) மற்றும் மாரி செல்வராஜின் கூட்டணி படம் டி 57 படமாக உருவாகும் என கூறப்படுகிறது.

தற்போது மாரி செல்வராஜ், “மஞ்சணத்தி” (Manjanathi) என்ற புது படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைக்கவுள்ளார். அந்த வகையில் இப்படத்தில் யார் நடிக்கிறார் என படக்குழு அறிவிக்கவில்லை என்ற நிலையில், அந்த நடிகைகளே இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் பிரச்சனை.. உண்மையை சொல்லுற அளவுக்கு தைரியம் இல்ல – இயக்குநர் எச்.வினோத்!

மாரி செல்வராஜ் படத்தில் இணையும் இரு நடிகைகள் :

மாரி செல்வராஜ் தனது இயக்கம் மற்றும் தனது தயாரிப்பில் உருவாக்கவுள்ள படம்தான் மஞ்சணத்தி. இப்படமானது வாழை படத்தை போலவே ஒரு உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமும் கிராமத்து கதைக்களத்தை மையமாக கொண்டு, ஒரு பீல் குட் திரைப்படமாக தயாராகவுள்ளதாம்.

இதையும் படிங்க: அதீத நெகடிவ் விமர்சனங்கள்… LIK பட தோல்வி குறித்து வெளிப்படையாக பேசிய விக்னேஷ் சிவன்!

அந்த வகையில் இப்படத்தில் இரு நடிகைகள் இணைந்து நடிக்கிறார்களாம். அது வேறு யாருமில்லை நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர்தான். இவர்கள் இருவருமே இப்படத்தில் லீட் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்களாம். இதை அவர்களே உறுதி செய்துள்ளனர்.

மஞ்சணத்தி படத்தில் நடிப்பது குறித்து பிரியங்கா மோகன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களை மையமாக கொண்டு வர நடிக்கும் முதல் படமாக மஞ்சனத்தில் அமைந்துள்ளது.

மஞ்சணத்தி படத்தில் நடிப்பது பற்றி நடிகை கயாடு லோஹர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

நடிகை கயாடு லோஹர் தமிழில் டிராகன் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் இதயம் முரளி, இம்மார்ட்டல் போன்ற படங்களில் நடித்துவரும் நிலையில், மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி படத்திலும் இணைந்துள்ளார். இப்படம் முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us