Mari Selvaraj: திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
Mari Selvaraj Meet M.K. Stalin: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் மாரி செல்வராஜ். இவர் முன்னாள் முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்து பதிவை பகிர்ந்து நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் கதிர் (Kathir) மற்றும் கயல் ஆனந்தியின் (Kayal Aanandhi) நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள்(Pariyerum Perumal) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj). இவரின் இயக்கத்தில் வெளியாகியிருந்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தனது இரண்டாவது படத்திலே தனுஷுடன் (Dhanush) இணைந்திருந்தார். இப்படம்தான் கர்ணன் (Karnan). இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இவ்வாறாக வாழை, மாமன்னன் மற்றும் பைசன் (Bison) என தொடர்ந்து புது புது படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுத்திருந்தது. இந்த வரிசையில் இவர், தனுஷின் 56 வது படத்தை இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு முன் வாழை 2 (Vazhai 2) படம் எடுக்கவுள்ளாராம்.
இது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அந்த வகையில், இன்று 2026 மே 16ம் தேதில்ல, முன்னாள் முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை (DMK leader MK.Stalin) இயக்குநர் மாரி செல்வராஜ் சந்தித்துள்ளார். அவருடன் நடந்த சந்திப்பு தொடர்பான நெகிழ்ச்சியான பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு.… pic.twitter.com/1HRMPxTo9z
— Mari Selvaraj (@mari_selvaraj) May 16, 2026
அந்த பதிவில் மாரி செல்வராஜ், “முன்னாள் முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். மேலும் அந்த சந்தோப்பின்போது, அன்புக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்” என அதில் இயக்குநர் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகள்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!
இயக்குநர் மாரி செல்வராஜ் தனுஷின் டி56 படத்தை இயக்குவதற்கு முன், வாழை 2 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் போன்ற பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்திற்கு புகப்பெற்ற இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படமானது, 80ஸ் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.