AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் படத்திற்கு முன்னதாக வேறு படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்

Director Mari Selvaraj is set to direct another film prior to his project with actor Dhanush | நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்குவதற்கு முன்னதாக மாரி செல்வராஜ் மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் படத்திற்கு முன்னதாக வேறு படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 May 2026 16:05 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ள இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் இதுவரை 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதன்படி முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது புது தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனுஷ் படத்திற்கு முன்னதாக வேறு படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்:

தனுஷுடனான தனது அடுத்தத் திட்டம் தாமதமானதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் வேறொரு திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இது ‘வாழை 2’ அல்ல. முற்றிலும் புதியதொரு கதை. இப்படத்தில் கதிர் கதாநாயகனாகவும், பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் மூலம், மாரி செல்வராஜுடன் இளையராஜா முதன்முறையாக இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இது தேவதாசின் ரத்தம் தெறிக்கும் ஆட்டம்… வெளியானது லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ட்ரெய்லர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தமிழ் சினிமா ரசிகர்களே இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன பார்க்கலாமா?

Follow Us