AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் சினிமா ரசிகர்களே இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன பார்க்கலாமா?

This Week OTT Release Update: தமிழ் சினிமாவில் வாரம் வாரம் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போல வாரம் வாரம் படங்கள் மற்றும் இணையதள தொடர்கள் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன ஓடிடியில் பார்க்கலாம் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா ரசிகர்களே இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன பார்க்கலாமா?
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 May 2026 22:59 PM IST

மிஸ்டர் எக்ஸ் படம்: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா உடன் இணைந்து நடிகர்கள் மஞ்சு வாரியர், கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

காளிதாஸ் 2: இயக்குநர் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி கடந்த 3-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காளிதாஸ் 2. இந்தப் படத்தில் நடிகர் பரத் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அஜய் கார்த்தி, சங்கீதா மாதவன் நாயர், அபர்நதி, பவானி ஸ்ரீ, அனந்த் நாக், டி.எம்.கார்த்திக், சிங்கம் ஜெயவேல், பிரகாஷ் ராஜ், கிஷோர், ராஜா ரவீந்திரன், சுரேஷ் சந்திர மேனன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… டார்க் காமெடி பாணியில் ஓடிடியில் வெளியான இந்த மோகினியாட்டம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

எக்ஸாம்: தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் இணைந்து தற்போது நடித்து உள்ள இணையதள தொடர் எக்ஸாம். இந்த தொடரில் நடிகர்கள் அப்பாஸ், அதிதி பாலன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகி உள்ளது. இந்த இணையதள தொடர் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… திரையுலகில் 50 ஆண்டுகள்… நான் இல்லாத போது கூட – இளையராஜா பகிர்ந்த தகவல்

Follow Us