ஜன நாயகன் படக்குழுவிற்கு விஜய் வைத்த கோரிக்கை – வைரலாகும் தகவல்
Sources said Vijay requests the Jana Nayagan team | நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜய் தான் இறுதியாக நடித்த ஜன நாயகன் படக்குழுவினரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகராக மாறினார் நடிகர் தளபதி விஜய். இவர் இந்த இடத்தினை பிடிக்க தனது கடின உழைப்பை செலுத்தி இருந்தார். தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். மேலும் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த வாழ்க்கையில் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வந்தார். தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தார். தொடர்ந்து சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த கட்சியின் சார்பாக பல பணிகளை செய்து வந்தார்.
மேலும் கடந்த 2025-ம் ஆண்டு இயக்குநர் எச்.வினோத் உடன் தனது 69-வது படத்திற்கு கூட்டணி வைத்த விஜய் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை இது தான் கடைசிப் படம் என்று தெரிவித்தார். மேலும் அவரது நடிப்பில் இறுதியாக உருவான படத்திற்கு ஜன நாயகன் என்றும் பெயர் வைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி வெற்றிப்பெற்ற நிலையில் அவர் தற்போது முதல்வராக உள்ளார்.




ஜன நாயகன் படக்குழுவிற்கு விஜய் வைத்த கோரிக்கை:
இந்த நிலையில் ஜன நாயகன் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் முதலமைச்சரும் நடிகருமான விஜய் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதில் தளபதி விஜய், தனது திரைப்படத்தில் மாண்புமிகு முதலமைச்சர் என்ற சிறப்புத் தலைப்பு அட்டையைச் சேர்க்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக, தனது ரசிகர்கள் அவரை அன்புடன் அழைப்பது போலவே தளபதி என்றே குறிப்பிட வேண்டும் என்றும் தயாரிப்புக் குழுவிடம் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… வீரப்பா பாடலின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை வெளியிட்ட கருப்பு டீம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan BUZZ – #ThalapathyVijay has reportedly asked the production team NOT TO ADD ANY SPECIAL “The Honourable Chief Minister” title card for the movie, and instead keep it as “#Thalapathy,” just like how his people lovingly call him ❤️ pic.twitter.com/XL96j1Giru
— Movies Singapore (@MoviesSingapore) May 13, 2026
Also Read… என்னை யாருமே கண்டுக்கல.. ஸ்டார் வேல்யூ பற்றி கதை சொன்ன ரஜினிகாந்த்!