மீண்டும் ஜன நாயகன் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமேசான் நிறுவனம்? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie OTT Rights Viral On Social Media: நடிகரும் தமிழக முதலமைச்சருமான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை பெறுவதற்காக மீண்டும் அமேசான் நிறுவனம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் தளபதி விஜய் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றியைப் பெற்று தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக ஜன நாயகன் என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்தப் படம் தான் அவரது நடிப்பில் இறுதியாக உருவாகும் படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. படம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உரிய நேரத்தில் படத்திற்கான சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்காத காரணத்தால் படத்தினை வெளியிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் கடந்த 5 மாதங்களாக இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை இழுபறியாகவே உள்ளது. தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வராமல் இருந்த காரணத்தால் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற அமேசான் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை முறிவு செய்ய முடிவு செய்தது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக முழுவதுமாக இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தை சுத்தி சுத்தி பிரச்சணைகள் ஓடிக்கொண்டே இருந்தது.




மீண்டும் ஜன நாயகன் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமேசான்:
இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று முதல்வராக பதவியேற்ற பிறகு ஜன நாயகன் படம் தொடர்பான பல அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் முன்னதாகவே, ஒரு மிகப்பெரிய தொகைக்கு அமேசான் ப்ரைம் வீடியோவால் வாங்கப்பட்டிருந்தன.
அறிவிக்கப்பட்ட தேதியில் திரைப்படம் வெளியாகாத காரணத்தினால், அந்த டிஜிட்டல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் தொடர்பாக அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மீண்டும் கேவிஎன் புரடெக்ஷன்ஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் மேலும் அதிகரித்து வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… Sreeleela: அந்த நடிகைதான் எனக்கு ரோல் மாடல்.. மனம் திறந்து பேசிய ஸ்ரீலீலா!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan’s digital rights were earlier acquired by #AmazonPrime Video for a huge amount. Since the film did not release on the announced date, the digital deal was reportedly cancelled.
Now, with #Vijay becoming CM, it is said that Amazon Prime Video is once again in talks… pic.twitter.com/zCmIxxmy32
— Movie Tamil (@_MovieTamil) May 12, 2026
Also Read… தனுஷ் 55 படத்தில் மம்மூட்டியின் காட்சிகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும்? வைரலாகும் தகவல்