AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் 55 படத்தில் மம்மூட்டியின் காட்சிகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும்? வைரலாகும் தகவல்

Mammoottys scenes in Dhanush 55 film update: மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் மம்முட்டி தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவரது காட்சிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அப்டேட் வைரலாகி வருகின்றது.

தனுஷ் 55 படத்தில் மம்மூட்டியின் காட்சிகள் அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும்? வைரலாகும் தகவல்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் நடிகர் மம்முட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 15:57 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் மம்முட்டி அவ்வபோது மற்ற் மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தொடர்ந்து நாயகனாக மாலையாள சினிமாவில் பல நூறு படங்களில் நடிகர் மம்முட்டி நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாவிலும் இவர் நாயகனாக பலப் படங்களில் நடித்து உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் மம்முட்டி நடித்தப் படங்களான அழகன், தளபதி என பலப் படங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேரன்பு என்ற படத்தில் நடித்து இருந்தார். இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் 55 படத்தில் ஷூட்டிங்கை முடிக்கும் மம்முட்டி:

அதன்படி நடிகர் மம்முட்டி தற்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மம்முட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். அதன்படி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வரும் படம் தனுஷ் 55. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக போதே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் காட்சிகள் தனுஷ் 55 படத்தில் வரும் வாரத்தில் முடிவடையும் என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூதாட்டம் கதைக்களத்தில்.. துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ரணபாலி படக்குழு

Follow Us