திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்த துரந்தர் தி ரிவெஞ்ச்.. ஓடிடி ரிலீஸில் டுவிஸ்ட்..!
Dhurandhar 2 OTT Update: பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங்கின் நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் துரந்தர் தி ரிவெஞ்ச். இப்படமானது வெளியாகி இன்றுடன் (08/05/2026) 50 நாட்களை கடந்துள்ள நிலையில், ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது, மேலும் இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவரின் நடிப்பில் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான துரந்தர் 1 படமானது (Dhurandhar), எதிர்பாராத அளவிற்கு ஒட்டுமொத்த இந்திய மக்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது தென்னிந்திய மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக துரந்தர் தி ரிவெஞ்ச் (Dhurandhar The Revenge) என்ற படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது. இதிலும் நடிகர்கள் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் (Sara Arjun), ஆர்.மாதவன் (R. Madhavan) மற்றும் அக்ஷய் கன்னா போன்ற பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படமானது உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 1900 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் இன்று 2026 மே 8ம் தேதியோடு இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 50வது நாளை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: தனுஷ் 56 படம் எந்த மாதிரியான கதை தெரியுமா? வைரலாகும் தகவல்
துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்பட 50வது நாள் முடிவு குறித்து வெளியான போஸ்டர் பதிவு :
#DhurandharTheRevenge continues its phenomenal box office run as it completes 50 glorious days in theatres, cementing its status as one of India’s biggest blockbusters. Presented by Jio Studios & B62 Studios, the film continues to scale new milestones week after week with its… pic.twitter.com/h3bawtTVjp
— Rajasekar (@sekartweets) May 8, 2026
துரந்தர் தி ரிவெஞ்ச் பட ஓடிடி ரிலீஸில் டுவிஸ்ட்:
ரன்வீர் சிங்கின் துரந்தர் 1 படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது சிறப்பாக பெற்றிருந்தது. இப்படம் திரையரங்குகளை காட்டிலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் துரந்தர் பார்ட் 2 படமும் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்துள்ள நிலையில், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிங்க: இரண்டு வானம் எனது முந்தைய படத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் – இயக்குநர் ராம்குமார்
இதில் டுவிஸ்ட் உள்ளது, துரந்தர் 1 படத்தை நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்த நிலையில், துரந்தர் 2 படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் ஸ்ட்ரீம் செய்கிறதாம். இந்திய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யும் நிலையில், பிற மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி ஸ்ட்ரீம் செய்யும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஜியோ ஹாட் ஸ்டாரில் துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.