Dhurandhar 2: பான் இந்திய வசூல் சாதனை.. 8 நாட்களில் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
Dhurandhar 2 Box Office,: இந்தி சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரன்வீர் சிங். இவரின் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகியதுதான் துரந்தர் : தி ரிவெஞ்ச். இந்த படமானது வெளியாகி 8 நாட்களை கடந்த நிலையில், வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.
பான் இந்திய கதாநாயகனாக உயர்ந்திருப்பவர்தான் நடிகர் ரன்வீர் சிங் (ranveer Singh). இவரின் நடிப்பில் தொடர்ந்து இந்தி சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான பான் இந்திய படம்தான் “துரந்தர் 2: தி ரிவெஞ்ச்” (Dhurandhar 2: The Revenge). இந்த படமானது அதிரடி ஆக்ஷன், திரில்லர் மற்றும் ஸ்பை கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதன் முதல் பாகம் கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியான நிலையில், கிட்டத்தட்ட ரூ 1300 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. அந்த வரிசையில் இதன் பாகம் 2, துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது, 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் (Sara Arjun), ஆர்.மாதவன் (R. Madhavan), சஞ்சய் தத் (Sanjay Dutt) மற்றும் அக்ஷய் கன்னா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் இன்று 2026 மார்ச் 27ம் தேதியோடு இப்படம் வெளியாகி 8 நாட்களை கடந்த நிலையில், வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்.. ராணாயணம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு!
8 நாட்களில் துரந்தர் தி ரிவெஞ்ச் படம் பான் இந்திய வசூல் விவரம் :
இந்த துரந்தர் தி ரிவெஞ்ச் படமானது, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் உலகமுழுவதும் வெளியிடப்பட்டிருந்தது. சில அரபு நாடுகளில் இப்படத்தை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பல தடைகளை கடந்தும் இந்த படமானது உலகளவில் கிட்டத்தட்ட ரூ 1088 கோடிகளை, வெறும் 8 நாட்களில் வசூலித்துள்ளது. இந்தியாவில் ரூ 814 கோடிகளும், வெளிநாடுகளில் கிட்டத்தட்ட ரூ 274 கோடிகள் என மொத்தமாக ரூ 1088 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்
துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Yeh dahaad hai naye Hindustan ki.🔥
Day-wise break-up | India NBOC
Weekend 1: 466 Cr*
DAY 5: ₹64 Cr*
DAY 6: ₹58 Cr*
DAY 7: ₹49 Cr*
DAY 8: ₹53 Cr*
India: ₹690 Cr*Week 1 | Worldwide GBOC (8 Days)
India: ₹814 Cr*
Overseas: ₹274 Cr*Book Your Tickets Now.
🔗-… pic.twitter.com/PvM0N0490X— Jio Studios (@jiostudios) March 27, 2026
இந்த படமானது தற்போது மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுவருகிறது. குறிப்பாக இப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்புகள் இருந்துவருகிறது. அந்த விதத்தில் தற்போதுவரை ரூ 1088 கோடிகள் வசூல் செய்துள்ள நிலையில், வார இறுதியில் இன்னும் அதிக வசூலை பெற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது பல நாடுகளில் தடை செய்யப்படும், இவ்வளவு வசூலித்திருப்பதே பெரிய விஷயம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.