வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 6 பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா, சித்ரா, மானு, விஜயா, மீனா, வெண்ணிலா ஆகிய 6 பெண்கள், குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து, மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.

விசாரணையில், தங்களது வீட்டுக்குச் செல்லும் வழித்தடத்தை அருகில் வசிப்பவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக பெண்கள் குற்றம்சாட்டினர். இதனால் குழந்தைகள் பள்ளிக்கும், குடும்பத்தினர் வெளியிடங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர்.
வழித்தடத்தை மீட்டுத் தருவதுடன், ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்