IND vs WI: சரவெடியாய் சம்பவம் செய்த சாம்சன்.. 249 ரன்கள் குவித்த இந்திய அணி!
IND vs WI 2nd T20: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 9ம் தேதி ராஞ்சியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சனின் அதிரடி 82 ரன்களால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையிலான 2வது டி20 போட்டி இன்று அதாவது 2026 அக்டோபர் 9ம் தேதி ராஞ்சியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சனின் (Sanju Samson) அதிரடி 82 ரன்களால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோர் இந்திய அணிக்கு பல சாதனைகளைப் படைத்ததுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி எடுத்த 8வது அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.
மேலும், இந்திய அணியில் அபிஷேக் சர்மா 20 ரன்களுக்கு, இஷான் கிஷன், 22 பந்துகளில் 43 ரன்களை விளாசினர். இதனுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 40 ரன்களும், திலக் வர்மா 18 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், இந்திய அணி 249 ரன்களை எட்டியது. இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியதன் மூலம் இந்திய அணி முக்கியமான 3 சாதனைகளை படைத்தது.
ALSO READ: காத்திருந்த ரன் எண்ணிக்கை.. 21 பந்துகளில் அரைசதம் கடந்த சஞ்சு சாம்சன்!




ராஞ்சியில் அதிகபட்ச ஸ்கோர்:
ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. ஸ்டேடியத்தில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் இதுவே அதிகபட்ச டி20 சர்வதேச ஸ்கோராகும். இதற்கு முன்னர், 2016-ல் இலங்கைக்கு எதிராக 196 ரன்கள் எடுத்து, ராஞ்சியில் அதிகபட்ச ஸ்கோருக்கான சாதனையை இந்தியா வைத்திருந்தது.
- 249 ரன்கள் – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- 196 ரன்கள் – இந்தியா vs இலங்கை
- 176 ரன்கள் – நியூசிலாந்து vs இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோர்
டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 244 ஆக இருந்தது. இதை, இந்திய அணி கடந்த 2016-ல் எடுத்திருந்தனர். மேலும், இது டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் எட்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ALSO READ: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு.. இந்திய அணியில் மாற்றமா?
2026-ல் வெஸ்ட் இண்டீஸ் எதிரான அணியின் அதிகபட்ச ஸ்கோர்
2026-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எந்த அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்ததில்லை. இந்த ஆண்டு இதுவரை, ஒரே ஒரு அணி மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி, கடந்த 2026 ஜனவரியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 225 ரன்கள் எடுத்து இந்தச் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்திய அணி அந்த இலக்கை கடந்துவிட்டது.