AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்..

Tiruparankundram Issue: இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் 17 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனமார்ந்த மன்னிப்பை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2026 15:11 PM IST

நவம்பர் 25, 2026: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், தீபம் ஏற்றப்படாததற்கான காரணங்கள் குறித்து 17 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் என அழைக்கப்படும் கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையும் உத்தரவிட்டிருந்தது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படாத சர்ச்சை:

ஆனால், நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய கல்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என்றும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க: தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?

கோயில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்

இதற்கிடையே, கோயில் நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், வழக்கமான இடத்திலேயே இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அறங்காவலர் குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

17 பக்க அறிக்கை – மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் 17 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு மனமார்ந்த மன்னிப்பை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தீபம் ஏற்றுவதற்கும், அதற்கான அனுமதியை தேவஸ்தானத்திடம் பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் – புகார் வந்தது எப்போது? டிஜிபி விளக்கம்

ஆனால், அறங்காவலர் குழு வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள இடத்திலேயே தீபம் ஏற்ற தீர்மானித்ததால், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் மூலம் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற நிலையில், தேவஸ்தானம் சார்பில் 10 பேர் கொண்ட குழுவினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தீபம் ஏற்றும் நபர்கள் யார் என்று தெரிவிக்கவில்லை

தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட நபர்கள் குறித்து கோயில் நிர்வாகம் எந்தக் கட்டத்திலும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மின்னஞ்சல் வாயிலாக நினைவூட்டிய போதிலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அதிகாரம் பெற்ற குழுவினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற முடிவு செய்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us