AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

5 ஆண்டுகளைக் கடந்தது சிலம்பரசனின் மாநாடு – தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

5 Years Of Maanadu Movie | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாநாடு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

5 ஆண்டுகளைக் கடந்தது சிலம்பரசனின் மாநாடு – தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
மாநாடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Nov 2026 15:11 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து படங்களில் நடிப்பதும் குறைத்தது. இப்படி இருக்கும் நிலையில் சிலம்பரசன் கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் தனது உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுத்தார் நடிகர் சிலம்பரசன்.

அப்படி சிலம்பரசனுக்கு சினிமாவில் கம்பேக்காக அமைந்த படம் மாநாடு. டைம் லூப் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்டி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

5 ஆண்டுகளைக் கடந்தது சிலம்பரசனின் மாநாடு:

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, மாநாடு படம் வெளிவந்து ஐந்தாவது வருடமாகிறது. மாநாடு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாட்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும். ஆத்ம திருப்தி தந்த அப் படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்பு தம்பி சிலம்பரசன் டி.ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு மரியாதைக்குரிய எஸ்.ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.

உடன் உறுதுணையாக நின்று உழைத்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார், எடிட்டர் கே. எல். பிரவீண், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோருக்கும்… நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி ஒய்.ஜி. மகேந்திரன், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், வாகை சந்திர சேகர், மஹத், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் கே பாரதி , உதயா, டேனியல் போப், அரவிந்த் ஆகாஷ், மற்றும் உடன் நடித்த நடிகர்..நடிகைகளுக்கும், அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும்… வெற்றியை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர் A. ஜான் அனைவருக்கும் என் என்றென்றுமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read… பிக்பாஸில் தனது சகோதரன் குறித்து நெகிழ்ந்து பேசிய பிரித்வி… வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இஞ்சி வெல்லம் படத்தின் முதல் சிங்கிள் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!

Follow Us