சிக்கலில் கமல் ஹாசனின் இந்தியன் 3 படம்? வைரலாகும் தகவல்
Indian 3 Movie Faces Another Hurdle | நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் இந்தியன் 3. இந்தப் படம் மீண்டும் ஒரு பிரச்சனையை சந்தித்து உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan). இவருக்கு தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் தமிழ் மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் உலக அளவில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் மொழியில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அது மட்டும் இன்றி அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இந்தியன் 3. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படு தோல்வியை சந்தித்த நிலையில் மூன்றாம் பாகம் எப்படி இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.




சிக்கலில் கமல் ஹாசனின் இந்தியன் 3 படம்? வைரலாகும் தகவல்:
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, இந்தியன் 3 படத்திற்கான டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்ட போதிலும், புதிதாகச் சேர்க்கப்பட்ட காட்சிகளுக்காகக் கமல் ஹாசன் மீண்டும் ஸ்டுடியோவிற்குச் சென்று கூடுதல் பகுதிகளைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கிடையில், தனக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் இன்னும் கிடைக்காததால் கமல் ஹாசன் அதிருப்தியில் உள்ளார். இது படத்தின் வெளியீட்டுத் திட்டங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாவதற்கு கமலின் ஒப்புதல் தேவைப்படுவதால், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன், அவரை நேரில் சந்தித்து இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
Also Read… மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Indian3 Faces Another Hurdle👀 ?
According to VP, Although #KamalHaasan has already completed dubbing for #Indian3, he needs to return to the studio to record additional portions for the newly added scenes😲.
Meanwhile, Kamal Haasan is unhappy over his pending remuneration, adding another complication to the film’s release plans.
With the film requiring Kamal’s consent for its release, Lyca Productions founder Subaskaran is said to be making efforts to meet the actor personally and resolve the issue amicably🤝.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) November 24, 2026
Also Read… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் பட கிளிம்ப்ஸ் எப்போது ரிலீஸ் தெரியுமா?