டிசம்பர் மாதம் முதல அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
Major Changes In December | ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலை முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2026, டிசம்பர் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு மாதம் தொடங்கும்போது கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை, ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், நவம்பர் மாதம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் ஒருசில நாட்களில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் முதல் என்ன என்ன முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் மாதம் முதல அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்
2026, டிசம்பர் மாதம் முதல் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), ஆர்பிஐ (RBI – Reserve Bank Of India) வட்டி விகிதம் ஆகிய முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதன் காரணமாக பெட்ரோல், டீசம் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், டிசம்பர் மாதம் முதல் பெட்ரோல், டீசம் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.




இதையும் படிங்க : இனி ஆன்லைன் மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை?.. 2027 முதல் ஆர்பிஐ அறிமுகம் செய்யும் 3 முக்கிய விதிமுறைகள்!
ஆர்பிஐ வட்டி விகிதம்
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ வட்டி விகிதத்தை அறிவிக்கும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான கடைசி ரெப்போ வட்டி விகிதத்தை டிசம்பர் மாத தொடக்கத்தில் அறிவிக்க உள்ளது. இது கடன் விகிதங்கள் ஆகியவற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆதார் மற்றும் கேஒய்சி மாற்றங்கள்
டிசம்பர் 03, 2026 முதல் எளிமைப்படுத்தப்பட்ட ஆர்பிஐ விதிகள் அமலுக்கு வர உள்ளன. அதேபோல, டிசம்ர 31, 2026 வரை ஆதார் செயலியில் மின்னஞ்சல் முகவரி சேர்க்க, புதுப்பிக்க ரூ.75 கட்டண விலக்கு அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : வேலை Vs சுயதொழில்.. இருவரில் யார் அதிகம் சம்பளம் பெறுகின்றனர்.. அறிக்கை கூறுவது இதுதான்!
வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிகள்
டிசம்பர் 15, 2026 அன்றுக்குள் முன்பண வரி (Advance Tax) தவணை செலுத்த வேண்டிய கடைசி தேதியாக உள்ளது. இதேபோல திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31, 2026 கடைசி தேதியாக உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த மாற்றங்களை தெரிந்துக்கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.