இனி ஆன்லைன் மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை?.. 2027 முதல் ஆர்பிஐ அறிமுகம் செய்யும் 3 முக்கிய விதிமுறைகள்!
RBI's New Rules 2027 To Protect People From Online Scams | இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி செல்லும் அதே வேலையில், மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பொதுமக்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்க ஆர்பிஐ சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் (Technology Development) உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறி வருகிறது. இந்தியாவில் என்னதான் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், அந்த தொழில்நுட்ப அம்சத்தை பயன்படுத்தி மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பொதுமக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் மோசடிகளுக்கு (Online Scams) முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) மூன்று முக்கிய விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், 2027 முதல் ஆர்பிஐ என்ன என்ன புதிய விதிகளை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கி வாரியாக பாதுகாப்பு கட்டுப்பாடு
சைபர் மோசடி காரணமாக வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை இழந்தால், அதற்கு வங்கிகள் தான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது ஆர்பிஐ-ன் விதியாக உள்ளது. இந்த நிலையில் தான், ஆர்பிஐ வரைவு விதியிலும் இது இடம்பெற்றுள்ளது. புதிய வங்கி கணக்கில் முதலில் டிஜிட்டல் பரிவர்த்தனை ஆஃப் செய்யப்பட்டு இருக்கும். வாடிக்கையாளர் ஆன் செய்த பிறகே, அது செயல்படும். எனவே, ஒரு வங்கி கணக்கில் அதிக லாக் இன் இருக்கிறது என்றால் அந்த கணக்கை வங்கி லாக் செய்ய வேண்டும். இல்லை என்றால், அது வங்கியின் அலட்சியமாக கருதப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.




இதையும் படிங்க : டிசம்பரில் அமலுக்கு வருகிறதா EPFO 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!
நிறுத்த பொத்தான்
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகளின்படி, இனி வாடிக்கையாளர்களுக்கு நிறுத்த பொத்தான் வசதி கிடைக்கும். இதன் மூலம் வங்கி கணக்கில் ஒரே ஒரு கிளிக் மூலம் பண பரிவர்த்தனையை நிறுத்த முடியும். மோசடிகளின்போது வங்கியில் இருந்து பணம் திருடப்படுவதை இது தடுக்க உதவும்.
இதையும் படிங்க : சரிவில் தங்கம் விலை.. நகைக் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய சிக்கல்.. என்ன தெரியுமா?
நம்பகமான நபர் பதிவு
வங்கி கணக்கில் இருந்து தெரியாத நபருக்கு பணம் அனுப்புகிறோம் என்றால் ஒரு பதற்றம் இருக்கும். அதாவது, சரியான நபருக்கு தான் பணத்தை அனுப்புகிறோமா என்ற குழப்பம் இருக்கும். இந்த குழப்பத்தை தவிர்க்க ஆர்பிஐ ஒரு வழியை உருவாக்கியுள்ளது. அதாவது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அதற்கு நம்பகமான ஒருவரின் ஒப்புதல் தேவைப்படும்.
அவர் உங்களது பண பரிவர்த்தனை சரியானதா என்பதனை உறுதி செய்த பிறகு அனுமதி அளிப்பார்.