மரபு மற்றும் ஆகம விதிகளின்படியே தீபம் ஏற்றப்பட்டது! திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் விளக்கம்
Tiruparankundram Deepam Issue: கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமய மரபுகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருவதாகவும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நவம்பர் 24, 2026: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், மரபு மற்றும் ஆகம விதிகளின்படியே கோவிலில் தீபம் ஏற்றப்பட்டதாகத் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையும் அறிவுறுத்தியிருந்தது.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் சர்ச்சை
Clashes broke out between protesting devotees and Police near the Thiruparankundram Temple. https://t.co/jHuCNlNF2C
— Vignesh Theni (@Vignesh_twitz) November 24, 2026
ஆனால், இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக மூலவர் சன்னதிக்கு நேராக அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தூணில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
மேலும் படிக்க: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..! பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்..
இதனால் அதிருப்தியடைந்த இந்து அமைப்பினர் மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.
மரபு மற்றும் ஆகம விதிகளின்படியே தீபம் ஏற்றம்!
இந்தச் சூழலில், கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.. மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்..
மேலும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருவதாகவும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.