AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.. மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்..

இன்று திருப்பரங்குன்றம் மலையில் மூலவர் சன்னதிக்கு நேராக மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.. மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Nov 2026 19:53 PM IST

நவம்பர் 24, 2026: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே இன்று தீபம் ஏற்றப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி இந்து அமைப்பினர் மலை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்..! பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்..

அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில், மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூண் என்பது நில அளவைக் குறிக்கும் அடையாளம் மட்டுமே என்றும், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உத்தரவிட்டிருந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு – 144 தடை உத்தரவு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை சுமார் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வழக்கமான இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றம்

இந்த நிலையில், இன்று திருப்பரங்குன்றம் மலையில் மூலவர் சன்னதிக்கு நேராக மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம்: விசாரணை அதிகாரிகள் நியமனம்! செல்போனை பறிமுதல் செய்ய போலீசார் திட்டம்

ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மலைப்பாதையில் நுழைய முயற்சி – போலீசாருடன் தள்ளுமுள்ளு!


தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து மலை அடிவாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைப்பாதைக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Follow Us