AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC Rule: எச்சில் பயன்படுத்த தடை.. சுப்மன் கில் வேண்டுகோளை நிராகரித்த ஐசிசி! ஏன் தெரியுமா?

ICC Saliva Ban: இந்திய கேப்டன் சுப்மன் கில், பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்பாட்டு தடையை நீக்க ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களுக்கு உதவ இது அவசியம் என்றார். ஆனால், ஐசிசி அவரது கோரிக்கையை நிராகரித்தது. உடல்நலக் கவலைகள் மற்றும் பந்து முறைகேடுகளைக் கண்காணிப்பதில் உள்ள சவால்களைக் காரணம் காட்டி, சர்வதேச கிரிக்கெட்டில் எச்சில் தடை தொடரும் என அறிவித்துள்ளது.

ICC Rule: எச்சில் பயன்படுத்த தடை.. சுப்மன் கில் வேண்டுகோளை நிராகரித்த ஐசிசி! ஏன் தெரியுமா?
சுப்மன் கில்Image Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Nov 2026 19:36 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கப்படும் ஐசிசி (ICC) கடந்த 2020ம் ஆண்டு முதல் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்துவதற்கு தற்காலிகமாகத் தடை விதித்தது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பெருந்தொற்று தீவிரத்திற்கு பிறகு, எச்சில் பயன்பாடு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கே முழு ஆதிக்கம் செலுத்தியது. போட்டி சமனில் முடிந்த பிறகு, எச்சில் மீதான தடையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) பரிந்துரைத்தார்.

ALSO READ: 7 ஆண்டுகள், 9 டெஸ்ட் போட்டிகள், 4 கேப்டன்கள்.. வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய அணி!

வெலிங்டன் டெஸ்டுக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், ”கூக்கபுர்ரா பந்து மிக விரைவாக மென்மையாகிறது. வீரர்கள் உமிழ்நீரைக் கொண்டு பந்தை மெருகேற்ற முடிந்தால், அது பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடும். உலகம் கோவிட் காலகட்டத்தை எப்போதோ கடந்துவிட்டது, அப்படியிருக்க உமிழ்நீர் மீதான தடை ஏன் இன்னும் நீக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ஐசிசி தடையை நீக்க முடிவா..?

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, உமிழ்நீர் பயன்பாட்டிற்கான தடையை நீக்குவதற்கு ஐசிசிக்கு தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வீரர்களின் உடல்நலக் கவலைகளைக் காரணம் காட்டி, 2020-ல் உமிழ்நீர் முதலில் தடை செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அது நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டது. உமிழ்நீர் பந்தின் தன்மையை மாற்றக்கூடும் என்று கூறும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) விதிகளுக்கு இணங்க இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இனிப்புகள், சூயிங்கம் மற்றும் புதினா மிட்டாய்களுடன் உமிழ்நீர் கலக்கும்போது, ​​அது பந்தின் பண்புகளை மாற்றக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இவ்வகையான பந்து முறைகேட்டைக் கண்காணிப்பது மிகவும் கடினம். மேலும், ஐசிசி உமிழ்நீரை வீரர்களுக்கும் போட்டி அதிகாரிகளுக்கும் ஓர் அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

ALSO READ: இந்திய அணியின் WTC 2027 இறுதிப் போட்டி வாய்ப்புகள்.. முழு தகுதிச் சுற்று சமன்பாடு..!

2026ம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் பாலியில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் உமிழ்நீர் மீதான தடையை நீக்குவது குறித்து விவாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us