Viral Video : திடீரென சிவப்பாக மாறிய ஓடை.. துருக்கியில் நடந்த சம்பவம்!
Why Did Turkey's River Turn Red | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், துருக்கியில் உள்ள ஓடை ஒன்றில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மற்றும் சமூக ஊடகங்களின் (Social Medias) உதவியால் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவம் கூட நொடி பொழுதில் உலகம் முழுவதும் தெரிய வருகிறது. அந்த அளவுக்கு இணையமும், சமூக வலைத்தளங்களும் மிக வேகமாக செயல்படுகின்றன. இவ்வாறு இணையத்தில் பகிரப்படும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மிக வேகமாக வைரலாக தொடங்கி விடுகின்றன. அந்த வகையில் தான், துருக்கியில் (Turkey) ஓடை ஒன்று முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிவப்பு நிறமாக மாறிய துருக்கி ஓடை
உலகம் முழுவதும் ஏராளமான ஆறுகள், நதிகள், ஓடைகள் உள்ளன. உலகமே மூன்று தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. பெரும்பாலான நீர் நிலைகளில் தண்ணீர் நீலம், பச்சை உள்ளிட்ட நிறங்களில் இருக்கும். இது ஒவ்வொரு பகுதிக்கும், அங்கு இருக்கும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில், துருக்கியில் உள்ள ஒரு ஓடை முழுவதுமாக சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. அந்த ஓடை மற்ற ஓடைகளை போல இருந்த நிலையில், தற்போது திடீரென சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : இரவு முழுவதும் பார்க் செய்ய அலைந்த ஓட்டுநர் இல்லாத மின்சார கார்.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
🚨 A STREAM IN TURKIYE HAS TURNED BLOOD RED… AND NO ONE KNOWS WHY. 🔴
The Degirmendere Stream in Rize, northeastern Türkiye, has suddenly turned a disturbing shade of red, triggering an investigation by local authorities.
The sight looks almost unreal, like something straight out of a disaster movie. But behind this eerie transformation could lie a serious environmental mystery.
Pollution? Chemical discharge? Something else entirely?
Authorities are investigating. The cause remains unknown.
When nature suddenly turns red, you don’t just look at it. You ask what happened. 🌊
#Türkiye #Rize #Mystery #Environment #BreakingNews https://t.co/sjn4NCAy32
— Kaptan Hindustan™ (@KaptanHindustan) November 23, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஓடையில் நீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த ஓடையில் நீர் வழக்கம் போல இல்லாமல் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. அது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, உள்ளூர் அதிகாரிகள் அது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.