AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: SENA நாடுகளில் 7 சதங்கள்.. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத IND.. மோசமான ரெக்கார்ட் வைத்த பண்ட்!

Rishabh Pant's SENA Centuries: ரிஷப் பண்ட் சேனா நாடுகளில் 7 டெஸ்ட் சதங்களை விளாசியும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது வியக்கத்தக்க சாதனை. அயல் மண்ணில் பண்ட் ஜொலித்தபோதும், அணி தோல்வியோ அல்லது சமனோ அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த இப்போட்டிகளில் இந்திய அணிக்கு மற்ற வீரர்களின் ஆதரவின்மையே வெற்றிக்குத் தடையானது.

IND vs NZ: SENA நாடுகளில் 7 சதங்கள்.. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத IND.. மோசமான ரெக்கார்ட் வைத்த பண்ட்!
ரிஷப் பண்ட்Image Source: AP and PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Nov 2026 19:56 PM IST

இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், SENA நாடுகளில் பலமுறை தனது பேட்டிங்கால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இருப்பினும், அவரது சதத்துடன் தொடர்புடைய ஒரு விசித்திரமான சாதனை உள்ளது. ரிஷப் பண்ட் (Rishabh Pant) இதுவரை SENA என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 7 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, இந்திய அணி (Indian Cricket Team) ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தனித்துவமான தற்செயல் நிகழ்வின் முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம்.

அதாவது, ரிஷப் பண்ட் SENA நாடுகளில் 7 டெஸ்ட் சதங்களை அடித்திருந்தாலும், இந்தியா இந்தப் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற்றதில்லை. அந்த அணி போட்டியில் தோற்றிருக்கிறது அல்லது சமன் செய்திருக்கிறது.

ALSO READ: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி.. எப்போது, எங்கே பார்க்கலாம்..?

சதமும்.. சமநிலையும்..


இங்கிலாந்தின் ஓவல் ஸ்டேடியத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிஷப் பண்ட் 114 ரன்கள் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்ல். இருப்பினும், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் பண்ட் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். இந்தப் போட்டியிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது. தொடர்ந்து, 2022ம் ஜூலை மாதம் இங்கிலாந்தின் பர்மிங்காமில் பண்ட் 146 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவருடைய இந்த சதம்கூட இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.

ALSO READ: இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி டிரா.. இறுதி வரை நீடித்த த்ரில் போராட்டம்!!

கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் லீட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து பண்ட் ஒரு சிறப்புச் சாதனையை நிகழ்த்தினார். இருப்பினும், இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. அதன்பிறகு, சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 128 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

இருப்பினும், இந்த சாதனைக்கு முழுக்க முழுக்க ரிஷப் பண்ட் மட்டுமே பொறுப்பாக்க முடியாது. அயல் மண்ணின் கடினமான சூழ்நிலைகளில் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்தபோதிலும், அணியில் உள்ள மற்ற வீரர்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காததும் இந்த முடிவுகளுக்கு ஒரு காரணமாகும்.

Follow Us