வயிற்றில் அடிக்கடி சத்தம் வருகிறதா? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன?
Stomach Growling: வயிறு மற்றும் குடல் தசைகள் சுருங்கி விரிவடையும்போது உணவு, திரவம் மற்றும் வாயுக்கள் நகர்வதால் குருகுரு சத்தம் ஏற்படுகிறது. பசி, செரிமானம், வாயுத் தொல்லை மற்றும் சில உணவுப் பழக்கங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
வயிற்றில் குருகுரு சத்தம் கேட்பது பொதுவான செரிமானச் செயல்பாடாகும். வயிறு மற்றும் குடல் தசைகள் (Stomach noice) சுருங்கி விரிவடையும்போது உணவு, திரவம் மற்றும் வாயுக்கள் நகர்வதால் சத்தம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். உணவு சாப்பிட்ட பிறகும் செரிமானத்தின்போது வயிற்றில் சத்தம் கேட்கலாம். பருப்பு வகைகள், முட்டைக்கோஸ், குளிர்பானங்கள் போன்றவை வாயு உற்பத்தியை அதிகரிக்கலாம். அவசரமாகச் சாப்பிடுவதாலும் வயிற்றில் காற்று சேர்ந்து சத்தம் ஏற்படலாம். வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் சத்தம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
Also Read: அழகு கிரீம் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு…! எங்கு தெரியுமா?
செரிமானக் கோளாறா அல்லது பசிக்கான அறிகுறியா?
வயிற்றில் திடீரென சத்தம் கேட்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான நிகழ்வாகும். குறிப்பாக, அமைதியான இடங்களில் இருக்கும்போது வயிற்றில் ‘குருகுரு’ அல்லது ‘உறுமல்’ போன்ற சத்தங்கள் கேட்கலாம். இதனை மருத்துவ ரீதியாக ‘போர்போரிக்மி’ (Borborygmi) என்று அழைக்கின்றனர். வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகள் சுருங்கி விரிவடையும்போது உணவு, திரவம் மற்றும் வாயுக்கள் செரிமானப் பாதையில் நகர்கின்றன. அப்போது ஏற்படும் அதிர்வுகளே வயிற்றில் சத்தமாகக் கேட்கின்றன.
வயிற்றில் சத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருக்கும்போது வயிறு மற்றும் குடலின் இயக்கங்கள் அதிகமாக உணரப்படலாம். குறிப்பாக, உணவு இல்லாத நேரத்திலும் செரிமானப் பாதையில் உள்ள தசைகள் சீரான இடைவெளியில் சுருங்கி, எஞ்சிய உணவுத் துகள்கள் மற்றும் வாயுக்களை நகர்த்துகின்றன. இதனால் பசி எடுக்கும்போது வயிற்றில் சத்தம் கேட்கிறது. அதேபோல், உணவு சாப்பிட்ட பிறகும் செரிமானம் நடைபெறும்போது இதுபோன்ற சத்தங்கள் ஏற்படலாம்.
எந்த உணவுகளால் வயிற்றில் சத்தம் அதிகரிக்கும்?
சில உணவுகள் குடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கலாம். குறிப்பாக, அதிக நார்ச்சத்துள்ள உணவுகள், பருப்பு வகைகள், முட்டைக்கோஸ் மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவை சிலருக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம். மேலும், அவசரமாகச் சாப்பிடுவது, சாப்பிடும்போது அதிகமாகப் பேசுவது போன்ற பழக்கங்களாலும் காற்று வயிற்றுக்குள் சென்று சத்தம் அதிகரிக்கலாம்.
Also Read: அழகு கிரீம் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு…! எங்கு தெரியுமா?
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பொதுவாக வயிற்றில் சத்தம் வருவது இயல்பான செரிமானச் செயல்பாடாகும். இருப்பினும், தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, அதிகப்படியான வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் அல்லது காரணமின்றி உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் வயிற்றுச் சத்தம் ஏற்பட்டால் அலட்சியம் செய்யக்கூடாது. இத்தகைய சூழலில் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.