Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Rishabh Pant

Rishabh Pant

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரிஷப் பண்ட். இவர் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்

Read More

Rishabh Pant: கர்நாடக சேர்ந்த கல்லூரி பெண்ணுக்கு கல்வி உதவி.. இடது கைக்கு தெரியாமல் கொடுத்த ரிஷப் பண்ட்!

Rishabh Pant Sponsors Poor Student: ரிஷப் பண்ட், கர்நாடக மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி கான்பூர் மடம் என்ற மாணவியின் கல்லூரிப் படிப்பிற்கு ரூ.40,000 நிதி உதவி செய்துள்ளார். பி.சி.ஏ படிக்க விரும்பிய ஜோதிக்கு நிதி நெருக்கடி இருந்தது. சமூக வலைத்தளங்கள் வழியாக இந்த செய்தி பரவி ரிஷப் பண்ட் உதவி செய்தார்.

India vs England 5th Test: காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்.. துருவ் ஜூரெல் – ஜெகதீசனுக்கு இடையே கடும் போட்டி! யாருக்கு வாய்ப்பு?

Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் காயத்தால் ஐந்தாவது இங்கிலாந்து டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2022ல் லிஸ்ட் A போட்டியில் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்த ஜெகதீசன், 52 முதல் தர போட்டிகளில் 3373 ரன்கள் எடுத்த அனுபவம் கொண்டவர். இருப்பினும், துருவ் ஜூரெலுக்கும் வாய்ப்புள்ளது.

Rishabh Pant Test Record: எலும்பு முறிவுடன் எகிறி அடித்த ரிஷப் பண்ட்.. குவிந்த எக்கச்சக்க சாதனைகள்..!

Rishabh Pant's Injury and Extraordinary Batting: ரிஷப் பண்ட் மான்செஸ்டர் டெஸ்டில் காயத்துடன் போராடி அரைசதம் அடித்து அசத்தினார். பந்து ஷூவில் பட்டதால் காயமடைந்த அவர், நொண்டியடித்தவாறு 54 ரன்கள் எடுத்தார். இது வெளிநாட்டு மண்ணில் அவரது 9வது 50+ ஸ்கோர். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!

India vs England 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விராட் கோலியின் ரன் சாதனையை முறியடிக்க முயற்சிக்க உள்ளார். கோலி 231 ரன்கள் எடுத்திருக்க, பண்ட் 203 ரன்களுடன் 28 ரன்கள் பின்தங்கியுள்ளார். முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த பண்ட், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். இந்திய அணி முதல் டெஸ்டை தோற்றிருப்பதால், இரண்டாவது டெஸ்ட் மிகவும் முக்கியமானது.

Rishabh Pant Backflip: பேக் ஃப்ளிப் அடிப்பது தேவையற்றது.. ரிஷப் பண்ட்க்கு ஆபரேஷன் செய்த மருத்துவர் கருத்து!

Rishabh Pant's Miraculous Recovery: ரிஷப் பண்டின் அதிர்ச்சி விபத்து மற்றும் அவரது அசாதாரண மீட்சி பற்றி டாக்டர் டின்ஷா பர்திவாலா விளக்கியுள்ளார். விபத்தின் தீவிரம், பண்ட் கேட்ட முதல் கேள்வி, அவரது மீட்புக்கான பயணம் மற்றும் பேக் ஃப்ளிப் கொண்டாட்டம் குறித்த கவலைகள் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பண்டின் தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு அவரது வெற்றிக்கு காரணம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

Rishabh Pant Century: SENA நாடுகளில் 6 டெஸ்ட் சதம்.. அனைத்திலும் இந்திய அணி தோல்வி.. ரிஷப் பண்டை துரத்தும் துயரம்!

IND vs ENG 1st Test: ரிஷப் பண்ட் SENA நாடுகளில் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த போதிலும், இந்தியா ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை. இந்தத் தோல்விகள் இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாதனைப் பங்களிப்பு இருந்தும் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இந்த அதிர்ச்சி தரும் தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Rishabh Pant: அம்பயரின் முடிவுக்கு ஆட்சேபணை.. ரிஷப் பண்டிற்கு ஐசிசி கடும் எச்சரிக்கை..!

IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரண்டு சதங்கள் அடித்தாலும், ஐசிசி விதி மீறலுக்காக எச்சரிக்கை பெற்றுள்ளார். லீட்ஸ் டெஸ்டின் மூன்றாம் நாளில், அம்பயரின் பந்து சோதனைக்குப் பிறகு, பந்தை தரையில் வீசியதற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலை 1 குற்றமாகக் கண்டறியப்பட்டு, ஒரு டெமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டது. மீண்டும் இத்தகைய தவறு செய்தால் போட்டித் தடை விதிக்கப்படலாம்.

இங்கிலாந்து எதிராக மீண்டும் ரிஷப் பண்ட் சதம்.. பேக்ஃபிளிப் அடிக்க சொன்ன சுனில் கவாஸ்கர்..!

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட், 2வது இன்னிங்ஸில் வெறும்130 பந்துகளில் சதம் அடித்தார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீரின் பந்துவீச்சில் ஒரு சிங்கிள் எடுத்து பண்ட் தனது சதத்தை நிறைவு செய்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்டை பேக்ஃபிளிப் செய்யச் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rishabh Pant Century Record: 93 ஆண்டுகளில் முதல் முறை! இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

IND vs ENG 1st Test: லீட்ஸில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்டில், ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து வரலாறு படைத்தார். இது இந்திய விக்கெட் கீப்பர்களின் வரலாற்றில் முதல் முறை. முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் எடுத்தார். இது அவருடைய 8வது டெஸ்ட் சதம். இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.