Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Hazare Trophy: விஜய் ஹசாரா டிராபியில் களமிறங்கும் கிங்.. டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி!

Virat Kohli play in Vijay Hazare Trophy: விராட் கோலி இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை இந்திய ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவில் அழுத்தம் உள்ளது.

Vijay Hazare Trophy: விஜய் ஹசாரா டிராபியில் களமிறங்கும் கிங்.. டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலி!
விராட் கோலிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Dec 2025 18:53 PM IST

இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபி (Vijay Hazare Trophy) வருகின்ற 2025 டிசம்பர் 24ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. டெல்லி அணி தனது அணி வீரர்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை அறிவித்துள்ளது. டெல்லி அணி வருகின்ற 2025 டிசம்பர் 21ம் தேதி போட்டியின் பயிற்சிக்காக புறப்பட உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், DDCA தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டெல்லி அணியை அறிவித்துள்ளது. இதில், விராட் கோலி (Virat Kohli) வீரராக விளையாடும் நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு தலைமை தாங்குகிறார்.

ALSO READ: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த நாளில் அணியை அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி அணிக்காக விளையாடும் கோலி, பண்ட்:


விஜய் ஹசாரே டிராபியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் விளையாடுவார்கள் என்று அறிவித்த பிறகும், முன்னதாக டிடிசிஏ சாத்தியமான வீரர்களின் பெயர்களை அறிவித்தது. அதில், டெல்லி 26 சாத்தியமான வீரர்களின் பெயர்களில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். இதில், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டும் டெல்லி அணிக்காக ஒன்றாக விளையாட இருப்பது டெல்லி கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஏனெனில், வருகின்ற 2026 ஜனவரி மாதம் இந்திய ஒருநாள் அணிக்காக விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் விளையாட இருப்பதால், டெல்லி அணியின் அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

விராட் கோலி இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால், கோலி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரை இந்திய அணியில் தேர்ந்தெடுக்க தேர்வுக் குழுவில் அழுத்தம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.

ALSO READ: கில்லுக்கு காயம்! சஞ்சு சாம்சனுக்கு வாழ்வா..? சாவா போட்டி..? காரணம் என்ன?

விஜய் ஹசாரே டிராபி 2025ல் டெல்லி அணியின் அட்டவணை:

  • 2026 டிசம்பர் 24 – ஆந்திரா vs டெல்லி
  • 2026 டிசம்பர் 26 – குஜராத் vs டெல்லி
  • 2026 டிசம்பர் 29 – சவுராஷ்டிரா vs டெல்லி
  • 2026 டிசம்பர் 31 – ஒடிசா vs டெல்லி
  • 2026 ஜனவரி 3 – சர்வீசஸ் vs டெல்லி
  • 2026 ஜனவரி 6 – ரயில்வேஸ் vs டெல்லி
  • 2026 ஜனவரி 8 – ஹரியானா vs டெல்லி