BCCI AGM 2025: குறையும் ரோஹித் – விராட்டின் சம்பளம்..? கில்லுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
Rohit Sharma - Virat Kohli Salary: 2024-25 ஒப்பந்த சுழற்சியில் (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை), விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் A+ பிரிவில் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் அடங்குவர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 31வது ஆண்டு பொதுக் கூட்டம் வருகின்ற 2025 டிசம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முறை, இந்திய அணியின் இரண்டு நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஒப்பந்தங்கள் குறித்து நிறைய விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு முதல் ரோஹித் மற்றும் விராட் கோலி (Virat Kohli) டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். தற்போது, இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், கோலி மற்றும் ரோஹித்தின் மத்திய ஒப்பந்தத்தில் பெரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ALSO READ: முதல் இடத்தில் ரோஹித்.. அடுத்த இடத்தில் கோலி.. ஒருநாள் தரவரிசையில் கலக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்!



கோலி-ரோஹித் ஜோடி A+ பிரிவில் இருந்து வெளியேறுகிறார்களா?
2024-25 ஒப்பந்த சுழற்சியில் (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை), விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் A+ பிரிவில் இடம் பெற்றிருந்தனர். இவர்களுடன் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் அடங்குவர். இருப்பினும், தகவல்களின்படி, பிசிசிஐ இப்போது இரு வீரர்களின் தரப்படுத்தலை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கோலி மற்றும் ரோஹித் A+ தரத்திலிருந்து நீக்கப்பட்டு A பிரிவில் சேர்க்கப்பட்டால், இரு வீரர்களின் ஆண்டு சம்பளத்தில் ரூ.2 கோடி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
- A+ கிரேடு: ரூ. 7 கோடி
- A கிரேடு: ரூ. 5 கோடி
இப்போது இரு வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால், A+ பிரிவில் தொடர்வது கடினம்.
சுப்மன் கில் A+ இல் நுழைவாரா?
BREAKING — BCCI Contracts Update:
• Rohit Sharma & Virat Kohli could face a ₹2 crore salary cut, possibly moving from A+ → A as they now play only ODIs.
• Shubman Gill is set for an upgrade to A+ category in the new cycle.
• Final decision on Dec 22 at BCCI AGM. pic.twitter.com/bSswMus3Gy— INDIA STATISTICS (@indi_statistics) December 11, 2025
இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில் தற்போது ஏ பிரிவில் உள்ளார். சமீபத்தில் கில்லுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, கில் தொடர்ந்து அனைத்து வடிவங்களிலும் விளையாடி வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், கில் ஏ+ தரத்திற்கு உயர்வதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ராவும் A+ பிரிவில் தொடரலாம்.
உள்நாட்டு கிரிக்கெட் குறித்தும் விவாதம்:
ஆண்கள் கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்களை தவிர, உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் மற்றும் ஒப்பந்த அமைப்பு குறித்தும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இதனுடன், நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டமும் முன்வைக்கப்படலாம்.
ALSO READ: சுப்மன் கில்லுக்கு சம்பளத்தை உயர்த்தும் பிசிசிஐ? எத்தனை கோடி தெரியுமா?
பிசிசிஐ-ல் பெரிய மாற்றங்களுக்குப் பிறகு முதல் கூட்டம்:
பிசிசிஐயின் பல நிர்வாக முக்கிய மாற்றங்களுக்குப் பிறகு, முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். ஏனெனில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் முதல் பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மனாஸூம், பொருளாளராக ரகுராம் பட்டும், செயலாளராக தேவ்ஜீத் சைகியா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி, பிசிசிஐயின் இணைச் செயலாளராக பிரபாதேஜ் சிங் பாட்டியாவும், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெய்தேவ் ஷாவும் புதிய கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.