IND vs SA 2nd T20: முன்னிலை வகிக்குமா இந்தியா? முட்டுக்கட்டை போடுமா தென்னாப்பிரிக்கா? 2வது டி20 போட்டி எங்கு, எப்போது?
IND vs SA 2nd T20I Live Streaming: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 சர்வதேசப் போட்டி முல்லன்பூரில் (புதிய சண்டிகர்) உள்ள மகாராஜா யாதவிந்திரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்தநிலையில், இரு அணிகளும் இடையிலான 2வது போட்டி (IND vs SA) நாளை அதாவது 2025 டிசம்பர் 11ம் தேதி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி (Indian Cricket Team) 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக, 2வது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற முயற்சிக்கும். அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் கொண்டு வர இறங்க ஆர்வமாக உள்ளது.
ALSO READ: அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா நம்பிக்கை.. 175 ரன்களை தொட்ட இந்திய அணி!
இரண்டாவது டி20 போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 சர்வதேசப் போட்டி முல்லன்பூரில் (புதிய சண்டிகர்) உள்ள மகாராஜா யாதவிந்திரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு தொடங்கும். இதன் காரணமாக, டாஸ் மாலை 6:30 மணிக்கு போடப்படும்.




டிவியில் நேரடி போட்டிகளை எங்கே பார்ப்பது?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் வெவ்வேறு சேனல்களில் கிடைக்கும்.
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆங்கிலம்
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் செய்து உங்களுக்கு விருப்பமான சேனல்களிலும் காணலாம்.
மொபைல் மற்றும் OTT இல் நேரடி ஒளிபரப்பு:
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டியை மொபைல் போன்கள் அல்லது லேப்டாப்களில் காண விரும்புவோர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப் தளத்தில் கண்டு மகிழலாம்.
இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா , வருண் சக்ரவர்த்தி,வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்
ALSO READ: டக்கென முடிந்த தென்னாப்பிரிக்கா பேட்டிங்.. 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
தென்னாப்பிரிக்கா அணி:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டெவோல்ட் ப்ரூவிஸ், டோனி டி ஜோர்ஜி, ரியா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், மார்கோ ஜான்சன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டொனோவன் ஃபெரீரா (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஓட்டோனியேல் மஹாராஜ், கெஸ்ஃபா என் பார்ட்மேன், அன்ரிச் நார்ட்ஜே.