Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs SA 1st T20: முதல் டி20யில் மோதும் IND vs SA.. இதுவரை ஹெட் டூ ஹெட்டில் யார் ஆதிக்கம்?

IND vs SA T20 Head to Head: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே இதுவரை மொத்தம் 31 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. இதில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றது.

IND vs SA 1st T20: முதல் டி20யில் மோதும் IND vs SA.. இதுவரை ஹெட் டூ ஹெட்டில் யார் ஆதிக்கம்?
இந்தியா - தென்னாப்பிரிக்கா Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Dec 2025 08:00 AM IST

இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் (IND vs SA T20 Series) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன் பிறகு, நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி (Indian Cricket Team) 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இப்போது, ​​டி20 தொடரை யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவும், தென்னாப்பிரிக்கா அணிக்கு ஐடன் மார்க்ரமும் தலைமை தாங்குகின்றனர். இந்தநிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கும் இடையிலான ஹெட் டூ ஹெட் விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ரோஹித், விராட்டுக்கு இடம் வேண்டும்.. பிசிசிஐயை வற்புறுத்தும் முன்னாள் தேர்வாளர்!

இந்திய அணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு:

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மீது அனைவரின் பார்வையும் இருக்கும். அபிஷேக் முழு பவர்பிளேயையும் விளையாடினால், எதிரணி பந்துவீச்சாளர்கள் நிச்சயம் திணறுவார்கள் என்பது நிச்சயம். எனவே, அபிஷேக் சர்மாவை சீக்கிரமே ஆட்டமிழக்கச் செய்வதே தென்னாப்பிரிக்கா அணியின் உத்தியாக இருக்கும்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி ஒருநாள் தொடரில் பங்கேற்காத இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று இந்திய பந்துவீச்சு வலுவானதாக மாற்றும். அதேநேரத்தில், வருண் சக்ரவர்த்தி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவார். மேலும், சுப்மன் கில் மற்றும் ஹர்டிக் பாண்ட்யா ஆகியோரும் அணிக்கு திரும்பியது பலம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 போட்டி நேருக்கு நேர்:

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே இதுவரை மொத்தம் 31 டி20 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. இதில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றது. இது இந்தூரில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இருப்பினும், இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

மொத்த போட்டிகள் – 31
இந்தியா வென்றது – 18
தென்னாப்பிரிக்கா வெற்றி – 12
முடிவில்லாதது – 1

ALSO READ: ஒருநாள் போட்டிக்கு பிறகு.. டி20யில் மோதும் இந்தியா-தென்னாப்பிரிக்கா.. முதல் டி20 போட்டியை எப்போது, எங்கு காணலாம்?

நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்கை எங்கே பார்ப்பது..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி மாலை 7:00 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்குகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதேநேரத்தில், மொபைல் மற்றும் லேப் டாப்பில் காண விரும்புவோர் ஜியோஹாட்ஸ்டார் ஆப்பில் காணலாம்.