Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Year Ender 2025: இந்திய ரசிகர்களுக்கு பல இடியை கொடுத்த தருணங்கள்.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்..!

Cricketers Who Retired In 2025: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா - விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த 2025 மே 7ம் தேதி ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த 3 நாட்களுக்குப் பிறகு, கடந்த 2025 மே 10ம் தேதி விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Year Ender 2025: இந்திய ரசிகர்களுக்கு பல இடியை கொடுத்த தருணங்கள்.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்..!
இந்திய கிரிக்கெட் வீரர்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Dec 2025 20:32 PM IST

2025ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிய இருக்கிறது. இந்த ஆண்டு கிரிக்கெட் கிட்டத்தட்ட ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இருந்தது. இதில், பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், ஆச்சரியமான சம்பவங்களும் நிறைந்திருந்தது. விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) போன்ற இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், பல இந்திய ஜாம்பவான்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்தநிலையில், 2025ம் ஆண்டில் எந்தெந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்தனர் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: கிரிக்கெட் முதல் கபடி வரை.. 2025ல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய இந்திய மகளிர் அணிகள்!

2025ல் இதுவரை ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் பட்டியல்:

  •  மே 7, 2025 – ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • மே 10, 2025 – விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • ஆகஸ்ட் 24, 2025 – சேதேஷ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
  • பிப்ரவரி 1, 2025 – முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • பிப்ரவரி 1, 2025 – இந்திய அணிக்காக இளம் வயதிலேயே அறிமுகமான பியூஷ் சாவ்லா 3 வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • ஆகஸ்ட் 27, 2025 – ஐபிஎல்லில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • செப்டம்பர் 4, 2025 – அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் வடிவங்களிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.
  • டிசம்பர் 3, 2025 –  2025 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா 3 வடிவங்களிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.
  • ஜனவரி 10, 2025 – இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக கலக்கிய வருண் ஆரோன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • ஜனவரி 5, 2025 – ரிஷி தவான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து மட்டும் தனது ஓய்வை அறிவித்தார்.

ரோஹித், கோலியின் டெஸ்ட் ஓய்வு:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா – விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த 2025 மே 7ம் தேதி ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த 3 நாட்களுக்குப் பிறகு, கடந்த 2025 மே 10ம் தேதி விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித் மற்றும் கோலி ஏற்கனவே டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ​​இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

ALSO READ: 3 கேப்டன்கள்.. 3 தோல்விகள் மட்டுமே! 2025ல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எப்படி?

சேதேஷ்வர் புஜாரா:

இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் சேதேஷ்வர் புஜாரா, 2025 ஆம் ஆண்டில், மூன்று வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆகஸ்ட் 24, 2025 அன்று அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.