IND vs SA 1st T20: டக்கென முடிந்த தென்னாப்பிரிக்கா பேட்டிங்.. 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
India vs South Africa 1st T20I: இந்திய அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமர் யாதவ், சுப்மன் கில், அபிஷேக் சர்மா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன.
இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA) இடையிலான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி (Indian Cricket Team) சார்பில் அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா தனது டி20 வாழ்க்கையில் 100 விக்கெட்டுகளை எட்டினார். கட்டாக்கில் முதலில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதுவரை, கட்டாக்கின் பராபதி ஸ்டேடியத்தில் இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்கா அங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியாவை தோற்கடித்திருந்தது. ஆனால் இந்த முறை, சூர்யகுமார் யாதவின் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை ஏற்படுத்தியது.
ALSO READ: அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா நம்பிக்கை.. 175 ரன்களை தொட்ட இந்திய அணி!
அதிரடியாக விளையாடி அசத்திய ஹர்திக் புயல்:
An emphatic win in the #INDvSA T20I series opener 🥳#TeamIndia register a 1⃣0⃣1⃣-run victory in Cuttack to go 1⃣-0⃣ up 🙌
Scorecard ▶️ https://t.co/tiemfwcNPh@IDFCFIRSTBank pic.twitter.com/mw3oxC5AHw
— BCCI (@BCCI) December 9, 2025
இந்திய அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமர் யாதவ், சுப்மன் கில், அபிஷேக் சர்மா என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன. அதன்பிறகு, களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக, கடைசி எட்டு ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து 175 ரன்களில் எண்ணிக்கையை முடித்தது.
ALSO READ: இந்திய ரசிகர்களுக்கு பல இடியை கொடுத்த தருணங்கள்.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள்..!
ஜஸ்பிரித் பும்ராவின் வரலாற்று 100:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். உவருக்கு முன்னதாக அர்ஷ்தீப் சிங் தற்போது 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ரா 78 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.