AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மோகன்லாலின் த்ரிஷம் 3 படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்

Drishyam 3 Movie Release Update: மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் த்ரிஷம். முன்னதாக இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது மூன்றாவது பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

மோகன்லாலின் த்ரிஷம் 3 படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்
த்ரிஷம் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Feb 2026 10:46 AM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். கடந்த 1980-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன இவர் பல நூறு படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வருகிறார். மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கனடா மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். 65 வயதான இவர் தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு போட்டியாக வரிசைக்கட்டிப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் மோகன்லால் நடிப்பில் தொடர்ந்து 6 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் 4 படத்தில் நாயகனாகவும் 2 படங்களில் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025-ம் ஆண்டில் மோகன்லால் நடிப்பில் படங்கள் வரிசைக்கட்டியது போல இந்த 2026-ம் ஆண்டிலும் படங்கள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் மற்றும் உருவாகி வரும் படங்களில் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மோகன்லாலின் த்ரிஷம் 3 படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த த்ரிஷ்யம் 3 படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மோகன் லால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூர்யாவை தொடர்ந்து வெங்கி அட்லூரி அடுத்து இயக்கப் போவது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் படத்தை கண்டிப்பாக பாருங்க – திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ!

Follow Us